Sunday, May 10, 2015

நாங்கள் சாதிக்க பிறந்த கட்சி !!!

எங்களை சாதிக்கட்சி என்று சொல்லும் அருமை தாயாதிகளுக்கு:
நாங்கள் உண்மையில் தமிழகத்தின் அனைத்து சாதியினரும் சமமாக பிரதிநிதித்துவம் பெற்று இருக்கும் கட்சி அதனால் எங்களை சாதிக்கட்சி என்று சொல்கிறிர்களா?
நீங்கள் டில்லிக்கு காவடி தூக்குவதிலும் கூட்டணி கட்சிகளிடம் கட்சியை தொடர்ந்து அடகு வைத்து நீங்கள் சுகவாசிகளாக வாழ்வதற்காக கட்சியை கடை நிலைக்கு கொண்டுவந்தது பொறுக்காமல் காலத்தால் காமராஜர் ஆட்சி என்பது கனவாகிவிடக்கூடாது என்று தொடங்கப்பட்ட பேரியக்கம் சாதிக்கட்சி என்றால் குஷ்புவை வைத்துக்கொண்டு கூத்தாடி நாடகம் நடத்தும் நீங்கள்?
இந்த கட்சியில் தான் 90 வயதை கடந்த தியாகி முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி லட்சுமி காந்தன் பாரதியும்,  பாரமலையும், எஸ்.ஆர்.பி யும்,  முனைவர் பிச்சை யும் காமராஜரை வழி ஒற்றி வந்தவர்களும் இருக்கிறார்கள் அவர்களும் சாதிக்கட்சியின் அங்கத்தினரா?
மக்கள் தலைவரை அன்னை இந்திராவும் , அமரர் ராஜிவும், அன்னை சோனியாவும் மற்றும் இந்தியதேசத்தின் பெரும் தலைவர்களும் மூப்பனார் என்று தான் அழைத்தார்கள் அதுவே அவர் காலத்தில் தொடங்கப்பட்ட எங்கள் இயக்கத்திலும் நிலைத்துவிட்டது ஏன் காங்கிரஸ் ஸ்தாபன காங்கிரஸாகவும் இந்திரா காங்கிரஸாகவும் இருந்தது உங்களுக்கு தெரியாதா?
உங்கள் லட்சியங்களை நீங்கள் மறந்துவிட்டீர்கள் நாங்கள் அதை முன்னேடுக்கிறோம் எனது சந்தேகம் இப்போது ஒன்று தான் உண்மையில் நீங்கள் எங்களை எதிர்க்கிறீர்களா இல்லை காமராஜர் ஆட்சியை கொண்டுவர துடிக்கும் எங்கள் லட்சியத்தை எதிர்க்கிறீர்களா?
உண்மையில் நாங்கள் சாதிக்க பிறந்த கட்சி

குஷ்புசெய்த தியாகம் அல்லது சேவை என்ன?

காமராஜர் காலத்திலிருந்து கட்சிக்காக பாடுபடும் குமரியாரையும் யசோதா அவர்களையும் பின்னுக்கு தள்ளி இடம் பிடிக்கும் அளவிற்கு காங்கிரஸிற்க்கு அல்லது இளங்கோவனுக்கு குஷ்புசெய்த தியாகம் அல்லது சேவை என்ன பங்காளிகளே ஆனால் நான் வருந்தும் அளவிற்கு கூட அவர்கள் இருவரும் வருந்தவில்லை போல அதே மேடையில் சிரித்துக்கொண்டு நிற்க்கிறார்கள். 128 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க  இயக்கம் சத்தியமூர்த்தியும்,  காமராஜரும், வ.உ.சியும், தமிழ்தென்றல் திரு.வி.கவும், கக்கனும், ராஜாஜியும், பாரதியும், கல்கியும், ஜெயகாந்தனும், மக்கள் தலைவரும், சி. சுப்பிரமணியமும், பக்தவத்சலமும், ஒ.வி. அலகேசனும், ராமசாமி ரெட்டியாரும்,  கே.பி. சுந்தராம்பாளும், குமாரசாமி ராஜாவும், செல்லப்பாண்டியனும், பொன்னம்மாளும் வளர்த்த  இயக்கம் இன்று பல்வேறு விமர்சனங்களுக்கு ஆட்பட்ட ஒரு நடிகையிடம் கொஞ்சம்கொஞ்சமாக அடகு வைக்கப்படுகிறது கட்சியின் மூத்ததலைவர்களுக்கு தரப்படாத மரியாதை இவருக்கு தரப்படுகிறது உண்மையில் இதை எப்படி சகித்திருக்கிறார்கள் அந்த மூத்தவர்கள் என்று தெரியவில்லை எல்லாவற்றிர்க்கும்  காரணம் பதவி ஆசைதானா அப்படித்தான் இருக்கும் வேறேன்ன

என் தலைவன்

என் தலைவனை முகஸ்துதிக்காகவாவது வானளாவ புகழாதவனும் என் தலைவனால் ஆதாயம் அடையாதவனும்தமிழக  காங்கிரஸில் இல்லை இதைமறுப்பவர் யார்?

Saturday, April 25, 2015

பொதுக்குழுவில் நண்பர்களுடன்




தமிழ் மாநில காங்கிரஸின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் நானும் ஒரு பொதுக்குழு உறுப்பினராக பங்கேற்றது என் வாழ்வின் மிக முக்கிய தருணங்களுள் ஒன்று அதற்கு நான் முதழில் எனக்கு அவ் வாய்ப்பை ஏற்படுத்திக்  கொடுத்த சமூக ஊடக பொறுப்பாளர்கள் திரு விஜய் ஞானதேசிகன் அவர்களுக்கும் எனது நண்பர் திரு டாக்டர் பாலமுருகன் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் பொதுக்குழுவில் எனது நீண்டநாளைய நண்பர்களையும் சகோதரர்களையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சிகுறிப்பாக வடலூர் அன்பு, தக்க்ஷா ஐயப்பன் சுருளிராஜன் , மற்றும் சுவாமிமலை சங்கர் என் தம்பிகள் மனோஜ் ஜோஷ்வா புஷ்பா நகர் அன்பு, மேஷாக், ஆலந்தூர் வினோத்மற்றும் சரவணன் ஆகியோருடன் நான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்

Social Media workers are Recognised in TMC in a great manner by Ayya G. K. Vasan


த.மா.கா வில் சமூக ஊடகக்குழுக்கு ( Social media ) முக்கியக்துவம்

நன்பர்களே இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஊடகக்குழுக்கு அங்கிகாரம் வழங்கி அவர்களை கௌவரவப்படுத்திய இயக்கம் நம் இயக்கம் தான்
ஓரு கட்சியின் கொள்கை பரப்புவதில்
சமூகத்திற்கு மிக முக்கியமான தூணாக விளங்குவது ஊடகம். இது வெறும் நிகழ்வுகளை மட்டும் அறிவிப்பதில்லை, மாறாக பொதுவான கருத்தினை உருவாக்குகிறது.
இதுவே ஊடகத்தை ஜனநாயகத்தில் ஒரு அதிகாரம் உள்ள ஒன்றாக ஆக்கியுள்ளது.
எங்கு அதிகாரம் உள்ளதோ அங்கே அதனைத் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பும் அதிகமாக உள்ளது.
சில நாடுகளில் மிகுந்த சக்தி வாய்ந்த ஊடகம் வாயிலாக - மனிதர்களையும், நிகழ்வுகளையும் ஒரு குறிப்பிட்ட வழியில் காட்டுவதன் மூலம், தேர்தல் முடிவுகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.
இந்தியாவில் கூட  அண்மையில் ஊடகத்தின் முக்கியமானவர்களுக்கும், சில அரசியல்வாதிகளுக்கும் இடையே இருந்த தொடர்பு வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சமூக ஊடகம் தோன்றியவுடன் முன்பிருந்த ஊடகம் வெகுவாக மாறியது. சமூக ஊடகம் வாயிலாக பொதுமக்களுக்கு எங்கும் கண்களும் காதுகளும் ஏற்பட்டு உள்ளன.
தொலைக்காட்சியின் சில சானல்களில் புகைப்படக் குழுவின்  தகவல்களுடன், அவர்கள் நின்று விடவில்லை.
எளிதில் போதனைகளாக ஏற்றுக்கொள்ள முடியாத ,  பொதுமக்களின் அபிப்ராயங்களை காட்டவல்ல மாபெரும் மேடையாக சமூக ஊடகம்  மாறி உள்ளது.
சமூகத்தின் நாடித் துடிப்பை பிரதிபலிக்க வல்லதாக உள்ளது.
பண்டைய சிறப்பு வாய்ந்த ஊடகத் தொலைக்காட்சித் தடங்கள் கூட தற்போதைய  சமூக ஊடகங்களின் பால்  கவனமாக உள்ளது.
இவ்வாறாக முக்கியத்துவம் வாய்ந்த சமுகஊடக்குழுக்கு அங்கிகாரம் அளித்து
த.மா.கா.வில் சுமார் 25 பேருக்கு மாநில அந்தத்து வழங்கி அதாவது மாநில பொதுக்குழு உறுப்பினர் பதவி வழுங்கி பல அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது..

தமிழ் மாநில காங்கிரஸ் முதல் பொதுக்குழு




 
த.மா.கா.வின் முதல் பொதுக்குழு கூட்ட சில நிகழ்வுகள்.
* த.மா.கா.வின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் இன்று நடந்தது.
* இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்துக்கு மாநிலம் முழுவதும் இருந்து 2 ஆயிரம் பேருக்கு தனித்தனியே அழைப்பிதழ்களை தலைவர் வாசன் அனுப்பி இருந்தார்.
* த.மா.கா.வின் முதல் பொதுக்குழு என்பதால் தொண்டர்கள் உற்சாகமாக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
* மாநிலம் முழுவதிலும் இருந்து நேற்று இரவே சென்னைக்கு தொண்டர்கள் வர தொடங்கினார்கள்.
* கார், வேன்களில் தொண்டர்கள் வந்து குவிந்துள்ளனர்.
* இன்று காலை 9 மணி முதல் பொதுக்குழு கூடிய அரங்கத்துக்குள் தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
* அரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கவுண்டர்களில் ரூ.500 செலுத்தி பொதுக்குழு உறுப்பினர்களாக தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டனர்.
* சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசன் வீட்டில் இருந்து வானகரம் வரை த.மா.கா. கொடி, பேனர்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு இருந்தன.
* கோயம்பேட்டில் இருந்து வானகரம் வரை ரோட்டின் இருபுறமும் பிரமாண்டமான வரவேற்பு பேனர்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
* பகல் 12 மணிக்கு ஜி.கே.வாசன் பொதுக்குழு கூட்டத்துக்கு வந்தார்.
* வழி நெடுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
* பூந்தமல்லி ரோட்டில் இருந்து ஸ்ரீவாரு மண்டபம் வரை திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் தலைவர் ஜி.கே.வாசன் வந்த வாகனம் மெதுவாக ஊர்ந்து சென்றது.
* மேள தாளங்களுடன் உற்சாகமாக தொண்டர்கள் அழைத்து வந்தனர்.
* மண்டப வாயிலை நெருங்கியதும் அதிர்வேட்டுகள் காதை பிளந்தன. ‘மக்கள் தளபதி வாழ்க’, ‘வருங்கால தமிழகம் வாழ்க’ என்று தொண்டர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினார்கள்.
* தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட தலைவர் ஜி.கே.வாசன் 12.05 மணிக்கு பொதுக்குழு அரங்கத்துக்கு வெளியே த.மா.கா. கொடியை ஏற்றி வைத்தார்.
* அதைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.கூட்டம் தொடங்கியதும் 12.15 மணிக்கு கட்சி தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை ஞானதேசிகன் வெளியிட்டார்.
* அதைத் தொடர்ந்து அய்யா ஜி.கே.வாசன் தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்தார்.
* வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் ஜி.கே.வாசன் த.மா.கா. தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
* இதற்கான அறிவிப்பை ஞானதேசிகன் வெளியிட்டார். உடனே பொதுக்குழு உறுப்பினர்கள் பலத்த ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பினார்கள்.
* அதைத் தொடர்ந்து புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜி.கே.வாசனை வாழ்த்தி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பீட்டர் அல்போன்ஸ், மகேஸ்வரி, கோவை தங்கம் உள்பட பலர் பேசினார்கள்.
* அதை தொடர்ந்து கட்சியின் செயல் திட்டங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* அதன் பிறகு தலைவர் ஜி.கே.வாசன் பொதுக்குழுவில் உரையாற்றினார்.
* இந்த பொதுக்குழுவில் திராவிட மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஆ.ஞானசேகரன், அருந்ததி மக்கள் கட்சி தலைவர் வலசை ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். அவர்கள் தலைவர் ஜி.கே.வாசனுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.


Tuesday, April 21, 2015

ஒரு நாள் ஒரு நட்சத்திரம் - தந்தி தொலைக்காட்சி

ஒரு நாள் ஒரு நட்சத்திரம் - தந்தி தொலைக்காட்சி மக்கள் தலைவர் அய்யா ஜி.கே . வாசன்
தேர்தல் பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி இடைவிடாத நெடிய பயணத்தின் ஒரு நாளின் முக்கிய பகுதிகளை தொகுத்தளித்து இருக்கிறார்கள் தந்தி தொலைக்காட்சிக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள்

மக்கள் தலைவர் அய்யா ஜி.கே. மூப்பனார் காணொளி

மக்கள் தலைவர் அய்யா ஜி.கே. மூப்பனார் காணொளி
மக்கள் தலைவரின் 1998 பொதுத்தேர்தல் பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி

Saturday, April 18, 2015

மக்கள் விடுதலை முன்னனி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியோடு இனைந்தது




ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு மற்றும் சட்டமாமேதை அம்பேத்காரின் பிறந்தநாள் அன்று மதுரையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகராஜன் அவர்களின் தலைமையிலான மக்கள் விடுதலை முன்னனி மக்கள் தளபதி ஐயா அவர்களின் முன்னிலையில் நமது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியோடு இனைந்தது

Friday, April 17, 2015

மக்கள் தலைவர் ஐயா ஜி.கே.மூப்பனார் வரலாறு

மக்கள் தலைவர் ஐயா ஜி.கே.மூப்பனார்
வரலாறு:
வாழும் காமராஜர் என்று பொது மக்களால்
அன்புடன் அழைக்கப்படும் கருப்பையா
மூப்பனார், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள
கபிஸ்தலம் என்னும் சிற்றூரில் 1931ம் ஆண்டு
ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி பிறந்தார்.
இவரது தந்தை ஆர். கோவிந்தசாமி
மூப்பனார், தாயார் சரஸ்வதி அம்மாள்.இவரது
உடன் பிறந்தோர் 6 பேர் சகோதரர்கள்:
ஜி.ரெங்கசாமி மூப்பனார், ஜி.சம்பத்
மூப்பனார், ஜி.சந்துரு மூப்பனார்;
சகோதரிகள்: ராமாநுஜத்தம்மாள், சாந்தா
அம்மாள், சுலோச்சனா அம்மாள். மூப்பனார்
தனது 19 ம் வயதில் 1949ம் ஆண்டு கஸ்தூரி
அம்மையாரை மணந்தார்.
இவர்களுக்கு ஒரு மகனும், ஒருமகளும்
உள்ளனர்.இவரது மகன் ஜி.கே
வாசன்,தற்போதைய தமிழ் மாநில காங்கரஸ் தலைவராக
உள்ளார்,மகள்உஷாராணி
மூப்பனார் குடும்பம் தஞ்சை மாவட்டத்தில்
புகழ் பெற்ற விவசாயக் குடும்பம். பழங்கால
காங்கிரஸ்காரர்களை நினைவுபடுத்தும்
ஒரு நினைவுச் சின்னமாக வளம் வந்தவர்.
பொது வாழ்வில் தூய்மை, அரசியலில்
நேர்மை,வளமான தமிழகம் வலிமையான
பாரதம் என்ற தாரக மந்திரத்துடன் மற்ற அரசியல்
தலைவர்களின் செயல்பாடுகளில் இருந்து
முற்றிலும் வேறுபட்டவர் மூப்பனார்.
தனது சிறு வயது முதலே மூப்பனார்
அரசியிலில் ஆர்வம் காட்டி
வந்தார்.காமராஜார் மறைவுக்கு பின்
ஸ்தாபன காங்கிரஸின் நிலை தமிழகத்தில்
கேள்விக்குறி ஆன போது, நெடுமாறன்,
சிவாஜி கணேசன், மூப்பனார் ஊர் ஊராக
சென்று காங்கிரஸாரின் கருத்துக்களைக்
கேட்டறிந்தனர்.
பெரிவாரியான காங்கிரஸார் இந்திரா
காங்கிரஸில் இணைவதையே விரும்பினர்.
மூப்பனாரும் மக்கள் மனநிலை ஒட்டியே
முடிவெடுத்தார்.
சென்னை மறைமலை நகரில் காங்கிரஸ்
இணைப்பு நடந்தது.அதில், யாருமே
எதிர்பாராத நிலையில் இந்திரா
காந்தி,மூப்பனாரை தமிழக காங்கிரஸ்
கமிட்டிக்கு தலைவராக்கினார்.
தொடர்ந்த நாட்களில் பல மாற்றங்கள்.மூப்
பனாரை, அகில இந்திய காங்கிரஸ்
கமிட்டியின் பொதுச்செயலாளர்
( அட்மினிஸ்ட்ரேஷன் ) பதவியில் கொண்டு
அமர்த்தியது.
காமராஜர் காலத்திற்கு பின், காங்கிரஸில்
பிரதமர்/தலைவர் வசமே , கட்சி
அட்மினிஸ்ட்ரேஷன் பொறுப்பு இருந்தது.
முதல் முதலாக பிரதமர்/காங் தலைவர்
அல்லாமல் , அதுவும், 9 வருடங்கள் அந்தப்
பொறுப்பில் அவர் இருந்தார்.
காமராஜர் இல்லாத காங்கிரஸை மக்களிடம்
வெற்றிகரமாக எடுத்துச் செல்லும்
நிலைக்கு மூப்பனார் பொறுப்பேற்றிருந
்தார்.
ஒரு தேர்தலில், ஜெயகாந்தன், மாலன் போன்ற
இலக்கியவாதிகள் காங்கிரஸில்
மூப்பனாரால் ஈர்க்கப்பட்டு
களப்பணியாற்றினார்கள்.சங்கீத வித்வானகள்,
திரையுலகினர், சாமான்யர்கள் அவரை
அணுக முடிந்தது.
டில்லியில் அவரது அலுவலகத்திற்கு
சென்று உதவி கேட்ட பல தமிழர்கள் அவரது
மேன்மையிலும் மென்மை… பரம்பரை
பணக்காரராக இருந்தும் கனிவுடன் பணிவு
என்ற குணங்களை கண்டு வியந்தார்கள்.எந்த
மனிதர் அறிமுகமும் இன்றி , இண்டர்வியூ
வந்திருக்கிறேன்… ஏதாவது செய்யுங்கள்
என்றவருக்கு தீன் மூர்த்தி பவனில் வேலை
வாங்கித்தந்தார்.
ஜாதி மத இன பாகுபாடின்றி பழகுவது,
கம்யூனிஸ்காரர்களிடம் நானும்
கம்யூனிஸ்ட் என்று சொல்லாமல், அதே
நிலையிலே பாசமுடன் பழகி வந்தார்.ஒரு
வடக்கத்திய பெண், தனது கிஃடாக வைர
மோதிரம் கொடுத்ததை, சிரிந்தபடி
புறந்தள்ளிய நிகழ்வை விகடன் குழும
பத்திரிக்கை எழுதியது…
இந்திராவின் துர்மரணம் பின் எழுந்த அசாதரண
சூழலில், ராஜீவ் வந்தார். மூப்பனார் முதல்
மாலை போடுதலை இண்டியன் நீயூஸ்
ரிவ்யூ காண்பித்தது.
மற்றவர்கள் தயங்கிய போது, இலங்கைத்
தமிழர்களின் அனைத்து இயங்கங்களும்
சம்மதிக்காத போது ஒப்பந்தம் வேண்டாம்
என்று சொன்னார்.
காங்கிரஸ்-அதிமுக மாறாத நட்பு என்ற
நிலை இருந்த போது, தமிழகத்தில் மக்கள்
அதிமுக எதிராக திரண்டு எழுந்த போது,
ரஜினி ,மூப்பனாரை முதல்வர் வேட்பாளராக
அறிவித்தால் ஊர் ஊராக சென்று வேலை
பார்ப்பேன் என்றதையும் புறந்தள்ளி ராவ்
அதிமுக கூட்டு என்றவுடன், தோன்றியது
தமாகா.
வென்றது வரலாறு.காங்கிரஸில் மூப்பனார்
ஒருவர் தான் மக்கள் மனநிலை பிரதிபலிக்கும்
தலைவர் என்று புரிந்தது.
அதே நேரம் அடுத்த தேர்தலில், மக்கள்
மனநிலை மருண்டு கிடந்த போது, பல
விமர்சனங்களைப் புறந்தள்ளி மக்களுக்கு
சாதகமாக இல்லை என்று அதிமுகவுடன்
கூட்டணி கண்டார்.
வென்றது வரலாறு.மீண்டும் மூப்பனார்
ஒருவரே சரியான முடிவெடுக்கும்
தலைவர் என்று தெளிவானது….
மூப்பனாருக்கு பலரிடம், கட்சிக்காரர்கள்
தாண்டி கலந்து பேசும் விசால மனது
இருந்தது.அவர் பத்திரிக்கைகாரர்களின்
கருத்துக்களை கேட்டறிதல், கடைநிலை
தொண்டனிடம் கட்சி பற்றி கேட்பது என்ற
அற்புத குணம் இருந்தது.
அதுவும், ஒரு நிலைப்பாட்டுடன் முழு
நேர அரசியல் பத்திரிக்கையை
நேர்மையுடன் நடத்தும் சோ மேல்
அபரிதமான மரியாதை இருந்தது.
அரசியல் தவிர கர்நடக இசையில் இவருக்கு
அதிக ஈடுபாடு உண்டு. இவர்
திருவையாறு தியாராஜர் உற்சவகமிட்டித்
தலைவராக இருந்து வந்தார்.
மேலும் பொது சேவைகள் செய்வதிலும்,
விளையாட்டிலும் ஆர்வமுடையவராக
இருந்தார்.இசையை ரசிப்பதும், புத்தகங்கள்
படிப்பதும் இவருக்கு பொழுது போக்கு.
மூப்பனார் இலங்கையைத் தவிர மற்ற எந்த
வெளிநாட்டுக்கும் சென்றதில்லை.
வெளிநாடுகளுக்குச் செல்லாத ஒரே
அரசியல்வாதி மூப்பனாராகத்தான்
இருக்கும்.
ஐயா மூப்பானார் புகழ் வாழ்க! நம் மக்கள்
தலைவரை மனதில் போற்றுவோம்!

Sunday, April 12, 2015

பல்வேறு கட்சியை சேர்ந்த 500 பேர் த.மா.காவில் இனைந்தனர்



திருவொற்றியூரை சேர்ந்த பல்வேறு கட்சிகளை சார்ந்த 500 பேர் இன்று தங்களை மக்கள் தளபதியினை நேரில் சந்தித்து தங்களை தமிழ் மாநில காங்கிரஸில் இனைத்துக் கொண்டனர்

Saturday, April 11, 2015

கர்மவீரர், மக்கள் தலைவர் மற்றும் பாரதரத்னா ராஜீவ் சிலை திறப்பு விழா



திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் முன்னாள்
இளைஞர் காங்கிரஸ் செயலர் ஜோதிக்கு சொந்தமான
இடத்தில், மறைந்த தலைவர்கள் காமராஜர், ராஜிவ்,
மூப்பனார் ஆகியோருக்கு, சிலைகள் நிறுவப்பட்டுள்ள
ன. இந்த மூன்று தலைவர்களின் சிலைகளை, ராகுல்
தான், திறந்து வைக்க வேண்டும் என்பதற்காக,
நீண்ட நாட்களாக சிலை அமைப்பு குழு காத்திருந்தது.
சமீபத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர்
இளங்கோவன், திருநெல்வேலி சுற்றுப் பயணம்
சென்ற போது, மூன்று தலைவர்களின் சிலைகளையும்
பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, மூன்று
தலைவர்களின் சிலைகளை திறக்க, ராகுலுக்கு அழைப்பு
விடுத்தார். ஓய்வு நாட்களை முடித்து விட்டு, டில்லிக்கு
ராகுல் திரும்பியதும், அவரை திருநெல்வேலிக்கு
அழைத்து வந்து, சிலைகளை திறந்து வைக்கவும்
இளங்கோவன் தீவிரமாக இருந்தார். இந்நிலையில்,
நெல்லை மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் சார்லஸ்
ஏற்பாட்டின் பேரில், ஜோதி தலைமையில் 100 பேர், வாசன்
முன்னிலையில் த.மா.கா,வில் இணைந்தனர்.
இதனால், மூன்று தலைவர்களின் சிலைகளை, ராகுல்
திறந்து வைக்க வாய்ப்பில்லை என்பதால்,
இளங்கோவன் மற்றும் திருநெல்வேலி மாவட்ட
காங்கிரஸ் பிரமுகர்கள், அதிர்ச்சி
அடைந்துள்ளனர். இதற்கிடையில், ராகுல் திறக்க
இருந்த, அந்த மூன்று தலைவர்களின் சிலைகளையும்,
இனி வாசன் திறந்து வைப்பார் என, சிலை அமைப்பு
குழுவின் தலைவர் ஜோதி தெரிவித்துள்ளது, காங்கிரஸ்
தரப்பில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

கூடுகிறது பொதுக்குழூ மாறட்டும் வரலாறு

தமிழ் மாநில காங்கிரஸின் முதற் பொதுக்குழூ வரலாற்று தலைவர் ஐயா வாசன் அவர்கள் தலைமையில் 24/04/2015 அன்று சென்னை வாணகரம் ஸிரி. வாரு திருமண மண்டபத்தில் கூடுகிறது வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் மீண்டும் பொற்கால ஆட்சிக்கான அச்சாரம் அங்கே உருவாக்கப்படும் நாளைய தமிழகம் ஐயாவின் பின்னால் அணிவகுக்கும்

Friday, April 10, 2015

ஆந்திர வனத்துறை துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு ஐயா வாசன் ஆறுதல்


ஆந்திர வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட 20 தமிழக கூலித்தொலிலாளர்கள் இல்லங்களுக்கு 10/04/2015 இன்று தலைவர் வாசன் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் அவர்கள் குடும்பங்களுக்கு தலா25000 உதவித் தொகை வழங்கினார்

Thursday, April 9, 2015

எழுத்துலக சிங்கம் ஜெயகாந்தன் மறைந்தார்

எழுத்துலக சிங்கம் பெருந்தலைவர். காமராஜரின் அணுக்க தொண்டர் மக்கள் தலைவரின் பாசத்திற்குரிய நண்பர் மக்கள் தளபதி அய்யா ஜி.கே.வாசன் அவர்களின் மீது பற்றும் பாசமும் கொண்டிருந்த ஜெயகாந்தன் மறைந்தார் அவர் எழுத்துக்கள் என்றும் மறையாது

Sunday, April 5, 2015

MARXIST LEADERS MEET AYYA G.K.VASAN


மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியின் மூத்த தலைவர்கள் சீதாராம் யெச்சூரி டி.கே.ரங்கராஜன் மற்றும் தமிழ் மாநில செயலாளர் திரு. ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் மக்கள் தளபதியை இன்று அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்

Saturday, April 4, 2015

G.K. Vasan - The Living Legend












Ayya G.K. Vasan is the Real Leader among the Politicains. He is the simple, dignified, kind, and Gentle leader.

மக்கள் தளபதியின் புகைப்படங்கள்




















மக்கள் தளபதியின் புகைப்படங்கள்