Friday, April 17, 2015

மக்கள் தலைவர் ஐயா ஜி.கே.மூப்பனார் வரலாறு

மக்கள் தலைவர் ஐயா ஜி.கே.மூப்பனார்
வரலாறு:
வாழும் காமராஜர் என்று பொது மக்களால்
அன்புடன் அழைக்கப்படும் கருப்பையா
மூப்பனார், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள
கபிஸ்தலம் என்னும் சிற்றூரில் 1931ம் ஆண்டு
ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி பிறந்தார்.
இவரது தந்தை ஆர். கோவிந்தசாமி
மூப்பனார், தாயார் சரஸ்வதி அம்மாள்.இவரது
உடன் பிறந்தோர் 6 பேர் சகோதரர்கள்:
ஜி.ரெங்கசாமி மூப்பனார், ஜி.சம்பத்
மூப்பனார், ஜி.சந்துரு மூப்பனார்;
சகோதரிகள்: ராமாநுஜத்தம்மாள், சாந்தா
அம்மாள், சுலோச்சனா அம்மாள். மூப்பனார்
தனது 19 ம் வயதில் 1949ம் ஆண்டு கஸ்தூரி
அம்மையாரை மணந்தார்.
இவர்களுக்கு ஒரு மகனும், ஒருமகளும்
உள்ளனர்.இவரது மகன் ஜி.கே
வாசன்,தற்போதைய தமிழ் மாநில காங்கரஸ் தலைவராக
உள்ளார்,மகள்உஷாராணி
மூப்பனார் குடும்பம் தஞ்சை மாவட்டத்தில்
புகழ் பெற்ற விவசாயக் குடும்பம். பழங்கால
காங்கிரஸ்காரர்களை நினைவுபடுத்தும்
ஒரு நினைவுச் சின்னமாக வளம் வந்தவர்.
பொது வாழ்வில் தூய்மை, அரசியலில்
நேர்மை,வளமான தமிழகம் வலிமையான
பாரதம் என்ற தாரக மந்திரத்துடன் மற்ற அரசியல்
தலைவர்களின் செயல்பாடுகளில் இருந்து
முற்றிலும் வேறுபட்டவர் மூப்பனார்.
தனது சிறு வயது முதலே மூப்பனார்
அரசியிலில் ஆர்வம் காட்டி
வந்தார்.காமராஜார் மறைவுக்கு பின்
ஸ்தாபன காங்கிரஸின் நிலை தமிழகத்தில்
கேள்விக்குறி ஆன போது, நெடுமாறன்,
சிவாஜி கணேசன், மூப்பனார் ஊர் ஊராக
சென்று காங்கிரஸாரின் கருத்துக்களைக்
கேட்டறிந்தனர்.
பெரிவாரியான காங்கிரஸார் இந்திரா
காங்கிரஸில் இணைவதையே விரும்பினர்.
மூப்பனாரும் மக்கள் மனநிலை ஒட்டியே
முடிவெடுத்தார்.
சென்னை மறைமலை நகரில் காங்கிரஸ்
இணைப்பு நடந்தது.அதில், யாருமே
எதிர்பாராத நிலையில் இந்திரா
காந்தி,மூப்பனாரை தமிழக காங்கிரஸ்
கமிட்டிக்கு தலைவராக்கினார்.
தொடர்ந்த நாட்களில் பல மாற்றங்கள்.மூப்
பனாரை, அகில இந்திய காங்கிரஸ்
கமிட்டியின் பொதுச்செயலாளர்
( அட்மினிஸ்ட்ரேஷன் ) பதவியில் கொண்டு
அமர்த்தியது.
காமராஜர் காலத்திற்கு பின், காங்கிரஸில்
பிரதமர்/தலைவர் வசமே , கட்சி
அட்மினிஸ்ட்ரேஷன் பொறுப்பு இருந்தது.
முதல் முதலாக பிரதமர்/காங் தலைவர்
அல்லாமல் , அதுவும், 9 வருடங்கள் அந்தப்
பொறுப்பில் அவர் இருந்தார்.
காமராஜர் இல்லாத காங்கிரஸை மக்களிடம்
வெற்றிகரமாக எடுத்துச் செல்லும்
நிலைக்கு மூப்பனார் பொறுப்பேற்றிருந
்தார்.
ஒரு தேர்தலில், ஜெயகாந்தன், மாலன் போன்ற
இலக்கியவாதிகள் காங்கிரஸில்
மூப்பனாரால் ஈர்க்கப்பட்டு
களப்பணியாற்றினார்கள்.சங்கீத வித்வானகள்,
திரையுலகினர், சாமான்யர்கள் அவரை
அணுக முடிந்தது.
டில்லியில் அவரது அலுவலகத்திற்கு
சென்று உதவி கேட்ட பல தமிழர்கள் அவரது
மேன்மையிலும் மென்மை… பரம்பரை
பணக்காரராக இருந்தும் கனிவுடன் பணிவு
என்ற குணங்களை கண்டு வியந்தார்கள்.எந்த
மனிதர் அறிமுகமும் இன்றி , இண்டர்வியூ
வந்திருக்கிறேன்… ஏதாவது செய்யுங்கள்
என்றவருக்கு தீன் மூர்த்தி பவனில் வேலை
வாங்கித்தந்தார்.
ஜாதி மத இன பாகுபாடின்றி பழகுவது,
கம்யூனிஸ்காரர்களிடம் நானும்
கம்யூனிஸ்ட் என்று சொல்லாமல், அதே
நிலையிலே பாசமுடன் பழகி வந்தார்.ஒரு
வடக்கத்திய பெண், தனது கிஃடாக வைர
மோதிரம் கொடுத்ததை, சிரிந்தபடி
புறந்தள்ளிய நிகழ்வை விகடன் குழும
பத்திரிக்கை எழுதியது…
இந்திராவின் துர்மரணம் பின் எழுந்த அசாதரண
சூழலில், ராஜீவ் வந்தார். மூப்பனார் முதல்
மாலை போடுதலை இண்டியன் நீயூஸ்
ரிவ்யூ காண்பித்தது.
மற்றவர்கள் தயங்கிய போது, இலங்கைத்
தமிழர்களின் அனைத்து இயங்கங்களும்
சம்மதிக்காத போது ஒப்பந்தம் வேண்டாம்
என்று சொன்னார்.
காங்கிரஸ்-அதிமுக மாறாத நட்பு என்ற
நிலை இருந்த போது, தமிழகத்தில் மக்கள்
அதிமுக எதிராக திரண்டு எழுந்த போது,
ரஜினி ,மூப்பனாரை முதல்வர் வேட்பாளராக
அறிவித்தால் ஊர் ஊராக சென்று வேலை
பார்ப்பேன் என்றதையும் புறந்தள்ளி ராவ்
அதிமுக கூட்டு என்றவுடன், தோன்றியது
தமாகா.
வென்றது வரலாறு.காங்கிரஸில் மூப்பனார்
ஒருவர் தான் மக்கள் மனநிலை பிரதிபலிக்கும்
தலைவர் என்று புரிந்தது.
அதே நேரம் அடுத்த தேர்தலில், மக்கள்
மனநிலை மருண்டு கிடந்த போது, பல
விமர்சனங்களைப் புறந்தள்ளி மக்களுக்கு
சாதகமாக இல்லை என்று அதிமுகவுடன்
கூட்டணி கண்டார்.
வென்றது வரலாறு.மீண்டும் மூப்பனார்
ஒருவரே சரியான முடிவெடுக்கும்
தலைவர் என்று தெளிவானது….
மூப்பனாருக்கு பலரிடம், கட்சிக்காரர்கள்
தாண்டி கலந்து பேசும் விசால மனது
இருந்தது.அவர் பத்திரிக்கைகாரர்களின்
கருத்துக்களை கேட்டறிதல், கடைநிலை
தொண்டனிடம் கட்சி பற்றி கேட்பது என்ற
அற்புத குணம் இருந்தது.
அதுவும், ஒரு நிலைப்பாட்டுடன் முழு
நேர அரசியல் பத்திரிக்கையை
நேர்மையுடன் நடத்தும் சோ மேல்
அபரிதமான மரியாதை இருந்தது.
அரசியல் தவிர கர்நடக இசையில் இவருக்கு
அதிக ஈடுபாடு உண்டு. இவர்
திருவையாறு தியாராஜர் உற்சவகமிட்டித்
தலைவராக இருந்து வந்தார்.
மேலும் பொது சேவைகள் செய்வதிலும்,
விளையாட்டிலும் ஆர்வமுடையவராக
இருந்தார்.இசையை ரசிப்பதும், புத்தகங்கள்
படிப்பதும் இவருக்கு பொழுது போக்கு.
மூப்பனார் இலங்கையைத் தவிர மற்ற எந்த
வெளிநாட்டுக்கும் சென்றதில்லை.
வெளிநாடுகளுக்குச் செல்லாத ஒரே
அரசியல்வாதி மூப்பனாராகத்தான்
இருக்கும்.
ஐயா மூப்பானார் புகழ் வாழ்க! நம் மக்கள்
தலைவரை மனதில் போற்றுவோம்!

No comments:

Post a Comment