Tuesday, November 23, 2010

மூப்பனார் சிறப்பு அஞ்சல்தலை இருட்டடிப்பு? - தினமணி நாளேடு கண்டனம்

மக்கள் தலைவர் என்று அனைவராலும் போற்றப்பட்ட அய்யா ஜி.கே.மூப்பனார் அவர்களின் தபால் தலை வெளயீடு எந்த செய்தியும் இன்றி இருட்டடிப்பு செய்யப்பட்டது மட்டும் இன்றி தமிழகத்தில் உள்ள எந்த அஞ்சலகங்களிலும் கிடைக்கவில்லை என்ற செய்தி நிச்சயமாக வேண்டும் என்றே நடத்தபடுவதாக தெரிகிறது மேலும் அய்யா அவர்கள் மறைந்து ஒன்பது ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்டதே தவறு அதற்கு காரணம் தகவல் தொழில் நுட்ப துறை தொடர்ந்து மற்ற கட்சிகளின் கையில் இருப்பதுவே அதுவும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த கூட்டணி கட்சியிடம் இருந்து வருகிறது சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் தனது நண்பர் என்று கூறிகொள்ளும் தலைவரை கொண்ட கூட்டணி கட்சி இதற்கு முன்பான காலத்திலும் பல முறை அய்யா அவர்களின் புகழை இருட்டடிப்பு செய்ய முயற்சித்திருக்கிறது உதாரணத்திற்கு சிவாஜிகணேசனுக்கு சிலைவைத்த தமிழக அரசு தற்போது தான் அய்யா அவர்களுக்கு சிலை வைக்க அனுமதி தந்தது மேலும் ஒரு மதத்தின் போதகர் என்பதை தவிர வேறு எந்த தகுதியும் அற்ற தினகரனின் பெயரை சென்னையில் உள்ள சாலைக்கு சூடினார்கள் அனால் அய்யா அவர்களின் பெயரை சூட்ட வில்லை இவை தோழமை கட்சியின் செயலை காட்டுகிறது மக்கள் தலைவரை பொறுத்த வரை காமராஜருக்கு பின் உருவான தலைவர்களில் முதன்மையானவர் ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை கடந்தவர் அதனால் தான் அவரை மக்கள் தலைவர் என்று அழைக்கிறோம் மேலும் தனை நாடி வந்த அத்தனை பதவிகளையும் வேண்டாம் என்று ஒதுக்கியவர் அதனால் தான் இன்று தினமணி நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டு தன் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளது அந்த செய்தி பின்வருமாறு தங்களுக்கு கொடுக்கபட்டுளது செய்தி வெளியிட தினமணி நாளிதலுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
நவ. 23: மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் சிறப்பு அஞ்சல்தலை இருட்டடிப்பு செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்திய அஞ்சல்துறை பொதுப் பயன்பாட்டுக்காக அஞ்சல்தலைகளை வெளியிடுகிறது. இதுதவிர, அரசியல் தலைவர்கள், வரலாற்றுச் சின்னங்கள், முக்கிய நிகழ்வுகளைச் சிறப்பிக்கும் வண்ணம் அவ்வப்போது, சிறப்பு அஞ்சல்தலைகளையும் வெளிட்டு வருகிறது.பொதுப்பயன்பாட்டுக்கான அஞ்சல்தலைகள் நாடு முழுவதும் உள்ள 1,60,000 அஞ்சலகங்களில் கிடைக்கும். ஆனால், சிறப்பு அஞ்சல்தலைகள், தமிழகத்தில் உள்ள 5 அஞ்சலகங்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள 72 சிறப்பு அஞ்சல் நிலையங்களில் மட்டுமே கிடைக்கும். பொதுவாக, சிறப்பு அஞ்சல்தலை வெளிடப்படும்போது, அஞ்சல்தலை, முதல் நாள் உறை, விளக்கக் குறிப்பு ஆகிய மூன்றும் வெளியிடப்படும். வெளியிடப்படும் நாளன்றே நாடு முழுவதும் உள்ள 72 அஞ்சலகங்களிலும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் இந்தச் சிறப்பு அஞ்சல்தலைகள் வெளியிடப்படும் நாளன்றே அஞ்சலகங்களில் வாங்குவதை விரும்புவர்.ஆனால், சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜி.கே. மூப்பனாரின் சிறப்பு அஞ்சல்தலை தமிழகத்தில் உள்ள அஞ்சலகங்களில் வெளியிடப்பட்ட நாளிலிருந்தே கிடைக்கவில்லையாம்.இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் கூறியது: "தமிழக முன்னாள் முதல்வர் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியாரின் சிறப்பு அஞ்சல்தலை ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் சிறப்பு அஞ்சல்தலையும் வெளியிடப்பட்டது.இந்த இரண்டு சிறப்பு அஞ்சல்தலைகள், வெளியிடப்பட்ட நாளிலிருந்தே தமிழகத்திலும், கேரளத்திலும் கிடைக்கவில்லை. இன்னும் வரவில்லை என அஞ்சலக அதிகாரிகள் கூறுகின்றனர்' எனத் தெரிவித்தனர்.அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக மூப்பனாரின் அஞ்சல்தலைகள் அஞ்சலங்களில் விற்கப்படாமல் தடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், தமிழகம், கேரளம் தவிர மற்ற மாநிலங்களில் எளிதாகக் கிடைக்கிறது.மேலும், ஜி.கே. மூப்பனாரின் அஞ்சல்தலை வெளியீட்டுக்கு முன்பு, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் மறைந்த ஒய். ராஜசேகரரெட்டியின் சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.அந்த அஞ்சல்தலை ராஜசேகர ரெட்டியின் அழகான புகைப்படத்துடன், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மூப்பனாரின் அஞ்சல்தலையில் அவரது உருவப்படம் தெளிவில்லாமல் இருக்கிறது.எனவே, மூப்பனாரின் சிறப்பு அஞ்சல்தலையை இருட்டடிப்பு செய்வதற்காகத்தான் இதுபோல செய்யப்பட்டுள்ளது என்ற புகார்கள் எழுந்துள்ளன.இதுகுறித்து திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்புக் குழு உறுப்பினர் புலியூர் ஏ. நாகராஜன் கூறியது: "மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் நேசிக்கப்பட்டவர். எந்தப் பதவிக்கும் ஆசைப்படாதவர். பிரதமர் பதவியே தேடி வந்தபோது அதை நிராகரித்தவர். பல பிரதமர்களை உருவாக்கியவர். அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு அஞ்சல்தலை வெளியிட்டது பாராட்டத்தக்கது. ஆனால், அந்த அஞ்சல்தலை மூப்பனாரின் சொந்த மாநிலமான தமிழகத்திலேயே கிடைக்காதது வருத்தமாக இருக்கிறது' என்றார் நாகராஜன்.எனவே, மத்திய அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு ஜி.கே. மூப்பனாரின் சிறப்பு அஞ்சல்தலைகள் தமிழகத்தில் உள்ள அஞ்சலகங்களில் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியினர், அஞ்சல்தலை சேகரிப்பாளர்களின் எதிர்பார்ப்பு

எடியுரப்பா ஊழல் தினமணி தலையங்கம்


கண்ணாடி வீட்டுக்குள் இருந்துகொண்டு கல்லெறியக்கூடாது என்ற சொற்றொடர் பாரதிய ஜனதா கட்சிக்கு இப்போது நன்றாகவே பொருந்தும். மும்பையில் ஆதர்ஷ் வீடுகள் தொடர்பாக முழுவீச்சில் களத்தில் இறங்கி, அந்த மாநில முதல்வர் பதவி விலக வேண்டிய சூழலை உருவாக்கிய பா.ஜ.க.வினருக்கு, தற்போது கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவும் இதே சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பது, மிகவும் தர்மசங்கடமான நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.மும்பையில் எத்தகைய முறைகேடு நடைபெற்றதோ அதற்கு இணையான, அதைவிடவும் மிகவும் மோசமான முறைகேடுகள் கர்நாடகத்திலும் நடைபெற்று இருக்கின்றன.முதல்வர் பதவியில் இருப்பவர் தனது அதிகாரத்தைத் தன் சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்தக்கூடாது. அதை மீறுவது பதவிப் பிரமாணத்தை மீறிய குற்றம். ஆனாலும் அதிகாரம் கண்களை மறைக்கிறது. குடும்பத்தை மட்டுமே முன்நிறுத்துகிறது. இதற்கு எந்த மாநிலமும், எந்த முதல்வரும், ஏன், அரசியலில் இருக்கும் பெரும்பான்மையான தலைவர்கள் பலரும் விதிவிலக்கல்ல என்று தெரிகிறது.எடியூரப்பா, அவரது மகன் பங்குதாரராக உள்ள நிறுவனத்துக்கு விதிகளை மீறி நிலம் ஒதுக்கீடு செய்துள்ளார். பெங்களூர் நகர வளர்ச்சி ஆணையத்தின் "ஜி' பிரிவு ஒதுக்கீட்டின் கீழ் தன் மகன், மகள் உறவினர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த முறைகேட்டில் தான் தப்பிக்க முடியாது என்கிற நிலையில், தன் மகள், மகன் மற்றும் உறவினர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை அவர்கள் திருப்பித் தந்துவிடுவார்கள் என்று கூறித் தப்பிக்க முயற்சிக்கிறார் எடியூரப்பா.திருடியதைக் கொடுத்து விடுகிறேன் என்றால், திருடன் அல்ல என்றாகிவிடுமா, என்ன? இப்போது இன்னும் வேகமாக அவர் மீதான குற்றச்சாட்டுகள் அள்ளி வீசப்படுகின்றன. இவர் மீது மட்டுமல்ல, எடியூரப்பாவின் அமைச்சரவையில் மின்துறை அமைச்சராக உள்ள ஷோபா கரந்தலஜே மீதும் நிலமோசடிப் புகார்கள் எழுந்தன. வீட்டுவசதித் துறை அமைச்சர் கட்டா சுப்பிரமணிய நாயுடு, அவரது மகன் (மாநகராட்சிக் கவுன்சிலர்) கட்டா ஜகதீஷ் மீதும் நிலமோசடிப் புகார்கள் எழுந்துள்ளன. இத்தகைய முறைகேடு, கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர்கள் ராமகிருஷ்ண ஹெக்டேயில் தொடங்கி குமாரசாமி வரை இருக்கிறது. எடியூரப்பாவின் நிலமோசடி ஊழல் மறுக்க முடியாத அளவுக்கு நிரூபிக்கப்பட்டுவிட்டது என்பதுதான் தற்போது பா.ஜ.க.வுக்கு இருக்கும் நெருக்கடி. நியாயமாகப் பார்த்தால், எடியூரப்பா தார்மிக அடிப்படையில் தனது பதவியிலிருந்து விலகி இருக்க வேண்டும். அதுதான் அவருக்கு மரியாதை சேர்த்திருக்கும். ஆனால் அதைச் செய்யத் தவறிவிட்டார் எடியூரப்பா. தனது கட்சியினர் ஆட்சி செய்யும் மாநிலத்தில் இப்படியொரு ஊழலை வைத்துக் கொண்டு, நாடாளுமன்றத்தைத் தொடர்ந்து ஸ்தம்பிக்கச் செய்யும் பா.ஜ.க.வின் போக்கு தற்போது அனைவரின் விமர்சனத்துக்கும் உள்ளாகியிருக்கிறது. முதலில் கர்நாடகத்தில் உள்ள ஊழலுக்கு பதில் சொல்லிவிட்டு அடுத்தவர் ஊழலைப் பற்றிப் பேசுங்கள் என்று காங்கிரஸ் சொல்கிற அளவுக்கு ஆகிவிட்டது. ஏனென்றால், காங்கிரஸ் கட்சி யாரெல்லாம் ஊழல் புகாரில் சிக்கினார்களோ அவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்து, பதவியிலிருந்து நீக்கிக் கொண்டே வருகிறது என்கிற தார்மிக பலம்தான் காரணம். சசி தரூர், மும்பையில் முந்தைய முதல்வர், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் கல்மாடி மற்றும் அவரது நண்பர்கள் என்று அனைவர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் பா.ஜ.க.வால் இதுவரை எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்க முடியவில்லை. தன்னை முதல்வர் பதவியிலிருந்து நீக்கினால் கர்நாடகத்தில் பாரதிய ஜனதா கட்சியை உடைப்பேன் என்று அவர் சொல்வதாக மேலிடத்துக்குத் தகவல் பறக்கிறது. தென்னகத்தில் தனது சக்தி கேந்திரம் என்று பா.ஜ.க. கருதும் கர்நாடக அரசை இழக்க அந்தக் கட்சி தயாராக இல்லை. அவரது சவாலைச் சகித்துக்கொண்டு சமாதானம் பேச தில்லிக்கு வரச் சொன்னால் புட்டபர்த்திக்குப் போகிறார் எடியூரப்பா. பா.ஜ.க.வால் ஒன்றுமே செய்ய இயலவில்லை. ஏற்கெனவே இரண்டு முறை எடியூரப்பாவின் முதல்வர் பதவிக்கு ஆபத்து வந்தது. அதை ஒருவழியாகச் சமாளித்து வெளியே வந்த நிலையில் மூன்றாவது ஆபத்தில் சிக்கிக்கொண்டுள்ளார் அவர். ஆட்சியைவிடக் கட்சியின் கௌரவம்தான் முக்கியம் என்று பாஜக கருதுவதாகத் தெரியவில்லை. தனது பதவியைவிட கட்சியின் நன்மதிப்புதான் பெரியதென்று எடியூரப்பாவும் கருதுவதாகத் தெரியவில்லை.எடியூரப்பா என்ன செய்யப்போகிறார் என்பது ஒருபுறம் இருந்தாலும், இந்த நில மோசடி என்பது இந்தியா முழுவதிலும் அரசியல்வாதிகளின் தொழிலாகவே ஆகிவிட்டது. அரசு அதிகாரிகள், நீதிபதிகள், ஆட்சிக்கு நெருக்கமான தோழமைக் கட்சித் தலைவர்கள், ஆளும் கட்சிப் பிரமுகர்களின் பினாமிகள், உறவினர்கள், ஏன், அரசுக்குச் சாதகமாக இருக்கும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலருக்கு சிறப்பு ஒதுக்கீடு என்கிற பெயரில் வீட்டுமனைகள் வழங்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.ஓர் அரசு தனிநபருக்கு நிலத்தை வழங்குகிறது என்றால், அது குறித்து அரசு கெசட்டில் வெளியாக வேண்டும். ஆனால் இந்த விவரங்கள் வெளியானாலும்கூட, பலன்பெறும் நபர்கள் யார் என்கிற விவரம் தொடர்புடைய சிலருக்கு மட்டுமே தெரியும் என்பதால், அரசு கெசட்டில் வெளியானாலும்கூட யாருக்கும் தெரியாமலேயே போகிறது. யாரோ ஒரு நபருக்கு 30 ஆண்டுகளுக்குக் குத்தகை என்பதாகவும், சிறப்புப் பொருளாதார மண்டலம் என்கிற பெயரிலும் அரசு நிலம் மிகக் குறைந்த விலைக்குக் கைமாறுகிறது. இதைச் செய்யும் அரசியல்வாதிகள் கோடிகோடியாய் லாபம் அடைகிறார்கள். இதில் அரசியல்வாதிகளை மிஞ்சும் மாவட்ட ஆட்சியர்களும்கூட இருக்கிறார்கள். முக்கியமான கோடைவாசஸ்தலங்கள் உள்ள பகுதிகளில் எந்தெந்த மாவட்ட ஆட்சியர்களின் பணிக்காலத்தில் யாருக்கெல்லாம் சலுகை விலையில் மனைகள், புறம்போக்கு நிலங்கள் ஒதுக்கப்பட்டன என்ற புள்ளிவிவரத்தை எடுத்து, விசாரித்தால் இன்னும் பல பூதங்கள் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கிளம்பும்.லியோ டால்ஸ்டாய் எழுதிய "6 அடி நிலம்' சிறுகதையை இவர்களுக்கு யார் படித்துக் காட்டுவது?

Monday, November 22, 2010

கர்நாடக அரசியல் பேரங்கள் வெளுக்கும் பா.ஜா.கா முகம்


நில மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு பதிலாக, வேறு ஒருவரை முதல்வராக நியமிக்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது. ஆனால், முதல்வர் பதவியிலிருந்து விலக மறுத்து, எடியூரப்பா அடம்பிடிக்கிறார். "எனக்கு 120 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. எனக்கு பதிலாக வேறு ஒருவர் முதல்வராக நியமிக்கப்படுவாரா, என்ற கேள்விக்கே இடம் இல்லை' என, பா.ஜ., மேலிடத்துக்கு, எடியூரப்பா சவால் விடுத்துள்ளார்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா, அரசுக்கு சொந்தமான நிலத்தை தனது மகன், மகள் மற்றும் உறவினர்களுக்கு ஒதுக்கீடு செய்ததாக, மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. "எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என, அந்த கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதில் மற்றொரு திருப்பமாக, எடியூரப்பா சார்பில் நடத்தப்பட்ட பணப்பரிமாற்றங்கள் குறித்த வங்கிக் கணக்கு தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.பார்லிமென்டில் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை எதிர்த்து தீவிரமாக போராடி வரும் பா.ஜ.,வுக்கு, எடியூரப்பாவின் நில ஊழல் பிரச்னை பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து, பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, அருண் ஜெட்லி, நிதின் கட்காரி, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங் ஆகியோர் நேற்று டில்லியில் ஆலோசனை நடத்தினர்.

இதில், இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம், கட்சித் தலைவர் நிதின் கட்காரிக்கு அளிக்கப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது.இந்த கூட்டத்தில், எடியூரப்பாவை பதவி நீக்கம் செய்தால், அவருக்கு பதிலாக யாரை நியமிப்பது என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கர்நாடாகாவில் மிகச் செல்வாக்கான வீரசை லிங்காயத் பிரிவினர் ஆதரவுடைய அவரை அகற்றுவது என்பது சுலபமல்ல என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. எடியூரப்பாவின் தலைமையை மாற்றினால், அதனால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

எடியூரப்பாவிற்கு பதிலாக, லிங்காயத் இனத்தைச் சேர்ந்தவரான ஜெகதீஷ் ஷெட்டரை நியமிப்பதா? அல்லது பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த ஈஸ்வரப்பாவை நியமிப்பதா? என்பது குறித்தும் ஆலோசனை நடந்தது. எவ்வித ஊழல்களிலும் சிக்காத டாக்டர் ஆச்சார்யா அல்லது சுரேஷ் குமார் ஆகியோரை பதவியில் நியமிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.கட்சியின் மற்றொரு தரப்பினர், எடியூரப்பாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இருந்தாலும், பிரச்னையை சமாளிக்க, எடியூரப்பாவுக்கு பதிலாக, வேறு ஒருவரை முதல்வராக நியமிக்க கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக டில்லி அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.அடம்பிடிக்கிறார்இந்நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்து, எடியூரப்பா அடம்பிடித்து வருகிறார். நேற்று, எடியூரப்பாவின் வீட்டில், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இதன்பின், நிருபர்களிடம் எடியூரப்பா கூறியதாவது:கட்சித் தலைமை என் மீது நம்பிக்கை வைத்துள்ளது. எனவே, டில்லிக்கு யாரும் செல்லவேண்டாம் என, எம்.எல்.ஏ.,க்களிடமும், அமைச்சர்களிடமும் தெரிவித்துள்ளேன். எனக்கு ஆதரவாக 110ல் இருந்து, 120 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். வெறும் 20 பேரையோ, 40 பேரையோ வைத்துக் கொண்டு நான் அரசியல் நடத்தவில்லை. எனக்கு பதிலாக யார் முதல்வராக தேர்வு செய்யப்படுவர் என கேட்கின்றனர். எனக்கு பதிலாக நான் தான் முதல்வராக தேர்வு செய்யப்படுவேன். இதில் எந்த சந்தேகமும் இல்லை.இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

கட்சி மேலிடத்தின் உத்தரவை ஏற்க மறுத்து, எடியூரப்பா அடம்பிடிப்பதால், பா.ஜ., மேலிடத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தால், கர்நாடக பா.ஜ.,வில் பிளவு ஏற்படுமோ என, பா.ஜ., தலைவர்கள் அஞ்சுகின்றனர். தென் மாநிலங்களில் முதலாவதாக ஆட்சியை பிடித்ததை இழக்க விருப்பமின்றியும், அதே சமயம் கட்சிக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை அகற்றமுடியாமலும் மேலிடம் இக்கட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

எடியூரப்பாவை மாற்றாதது ஏன்? மாநில பா.ஜ., தலைவர் விளக்கம் : ""முதல்வர் எடியூரப்பாவை மாற்ற வேண்டாம். தாலுகா, உள்ளாட்சி தேர்தல் வரும் இந்நேரத்தில் முதல்வர் மாற்றம் தேவையில்லை என்று கூறியுள்ளேன்,'' என கர்நாடகா மாநில பா.ஜ., தலைவர் ஈஸ்வரப்பா கூறினார்.

ஷிமோகாவில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:எடியூரப்பாவை மாற்றக்கூடாதென்பது தான் எனது முடிவு. இதையே மேலிடத்தில் கூறியுள்ளேன். ஆயினும் மேலிடம் எடுக்கும் முடிவை நான் ஏற்றுக் கொள்வேன். நான் முதல்வர் வேட்பாளர் இல்லை. அந்த எண்ணம் எதுவும் இல்லை. நான் யாரிடமும் முதல்வர் வேட்பாளர் என்று கூறவில்லை. பா.ஜ.,வில் மாநில தலைவர் முதல்வராக வேண்டும் என்ற மரபு இல்லை.முதல்வர் எடியூரப்பாவை மாற்ற வேண்டாம். தாலுகா, உள்ளாட்சி தேர்தல் வரும் இந்நேரத்தில் முதல்வர் மாற்றம் தேவையில்லை என்று கூறியுள்ளேன். வெறும் 28 உறுப்பினர்களை கொண்டுள்ள ம.ஜ.த.,வில், ரேவுண்ணா துணை முதல்வர், குமாரசாமி மத்திய அமைச்சர் என கனவு காண்கின்றனர்.இவ்வாறு ஈஸ்வரப்பா கூறினார்.

எடியூரப்பா அரசை கவிழ்க்க நடந்த சதி : அமைச்சர் நடத்திய ஆலோசனை அம்பலம் : கடந்த ஆகஸ்ட் மாதம் சுற்றுலா துறை அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, அசோக் சர்மா என்பவருடன் தனியார் ஓட்டல் ஒன்றில் எடியூரப்பா அரசை கவிழ்க்க திட்டம் தீட்டியுள்ளது வெளிச்சத்திற்கு தெரியவந்துள்ளது.
அசோக் சர்மா, ஜனார்த்தன ரெட்டி ஆகியோர் நடத்திய பேச்சு தற்போது "சிடி' யாக வெளியாகி உள்ளது.
அதன் விவரம்:
அசோக் சர்மா:
நான் கவர்னருக்கு மிகவும் நெருக்கமானவன். அவர் மூலம் எடியூரப்பா அரசை கவிழ்க்க முடியும். இதை நீண்ட நாட்களுக்கு முன்பே செய்திருக்க முடியும்.
ஜனார்த்தன ரெட்டி: ஏன் இன்னும் எடியூரப்பா அரசை கவிழ்க்காமல் இருக்கிறீர்கள்.
அசோக் சர்மா: நான் உங்களின் ஆலோசகராக இன்று இருக்கிறேன். ஒரு பெரிய தொகையை கொடுத்தால், எடியூரப்பா அரசை கவிழ்த்து விடுவேன்.
ஜனார்த்தன ரெட்டி: 20 கோடி ரூபாய் தருகிறேன். முதல் தவணையாக 15 கோடி ரூபாய் கொடுக்கிறேன்.இப்படி போகிறது உரையாடல்.

எடியூரப்பாவை நீக்கி விட்டு, அனந்தகுமாரை முதல்வராக்க ஜனார்த்தன ரெட்டி முயன்றதாகவும் தெரியவந்துள்ளது. இந்த முயற்சி ஏன் வெற்றி பெறவில்லை என்று தெரியவில்லை

Wednesday, November 17, 2010

தமிழகத்தில் காங்கிரஸ் முதல் நிலையை அடையும்: ஜி.கே.வாசன்



கடந்த 43 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியில் இல்லாவிட்டாலும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பதால், தமிழகத்தில் முதல் நிலையை அடையும் வாய்ப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருப்பதாக மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று காலை உதகை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது:தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும். சென்னை துறைமுகத்தில் ரூ. 3,686 கோடி செலவிலான் மெகா கன்டெய்னர் டெர்மினல் திட்டத்தின் முதற்கட்ட பணிகள் 2013-ம் ஆண்டிலும் 2-ம் கட்டப் பணிகள் 2017-ம் ஆண்டிலும் முடியும்.ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.100 கோடி செலவில் 125 ஏக்கர் பரப்பில் உலர் துறைமுகம் அமையும். இதற்கு ராஜீவ் காந்தி பெயர் சூட்டத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எண்ணூர் துறைமுகத்தில் 110 கோடி செலவில் 3 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்யும் வகையிலான பல்முனை பயன்பாட்டு முனையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்.2004-ம் ஆண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி தொடர்கிறது. கூட்டணி மாற்றங்கள் ஏதும் இருந்தால் அதை சோனியாதான் முடிவு செய்வார். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் முழுமையான ஆதாரம் இல்லாமல் குற்றம் சுமத்துவது அவதூறாகும். நீதிமன்றமும் சட்டமும் இருக்கின்றன. எனவே ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் உண்மை விரைவில் வெளிவரும்43 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆட்சியில் இல்லாவிட்டாலும் காங்கிரஸ் கட்சி மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது. விரைவில் முதல் நிலையை அடைய வாய்ப்பு இருக்கிறது.தென் தமிழக மக்களின் கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும்.இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

ஜி.கே.மூப்பனார் தபால் தலை வெளியிடு



மக்கள் தலைவர் அய்யா அவர்களின் தபால் தலை வெளியிடுமாறு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திரு எல்.கே.வெங்கட் அவர்கள் அன்றைய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் திரு. தயாநிதி மாறன் அவர்களிடம் கோரிக்கை வைத்தார் அந்த கோரிக்கை இன்று தபால் துறையால் நிறைவேற்ற பட்டுள்ளது. ஆகஸ்ட் முப்பது மக்கள் தலைவர் அய்யா அவர்களின் நினைவு நாள் ஆகும் அன்று இந்த தபால் தலைகளி வெளியிட்டு மக்கள் தலைவர் அய்யா அவர்களை பெருமை படுத்தியமைக்காக ஜி.கே.மூப்பனார் பேரவை நன்றி தெரிவித்து கொள்கிறது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு எல்.கே.வெங்கட் அவர்கள் வைத்த கோரிக்கை பின் வருமாறு வலை தலத்தில் வெளியானது அதை அப்படியே இங்கு வெளியிடுகிறோம்.
Note" Tamil Nadu Youth Congress leader L K Venkat, in a petition to the Union communication minister, has urged him to release a special commemorative stamp on G K Moopanar on August 30, 2004, his death anniversary.

இந்திய தபால் துறை தன் வலை தலத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பு பின் வருமாறு
First Day Cover – G.K.Moopanar – By India Post
Shri Govindasamy Karuppiah Moopanar, better known as G.K. Moopanar, was born on 19th August 1931, at Kapisthalam Village in Thanjavur District at Tamil Nadu to Shri R Govindasamy Moopnar and Smt. Saraswathy Ammal.
A great statesman and political leader, Sh G.K. Moopanar served as the President of Thiruvaiyaru Brahma Sabha, and the Co-operative Society of Chandrasekarapuram.
Date Of Issue:-30.08.2010.

இன்றைய அரசியல் சூழ்நிலைகளும் மக்கள் தளபதி அய்யாவும்



இன்றைய அரசியல் சூழ்நிலைகளும் மக்கள் தளபதி அய்யாவும்

நம் மக்கள் தளபதி அய்யா அவர்கள் நம் இதயங்களில் வாழும் மக்கள் தலைவர் அய்யா அவர்களின் மறைவிற்கு பின் அனைவரது ஏகோபித்த ஆதரவுடன் ஒருமனதாக தமிழ் மாநில காங்கிரஸின் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார் அய்யா அவர்கள் அப்போது வெறும் முப்பத்தி ஐந்தே வயது நிறைந்தவர் ஆவார்அது நாள் வரையிலும் எந்த நேரடி அரசியலிலும் ஈடு படாமல் மக்கள் தலைவரின் பின்புலமாக மட்டுமே இயங்கி வந்த நம் அய்யா அவர்களின் தோள்களில் தமிழ் மாநில காங்கிரஸ் என்னும் பேரியகத்தையும் அதை காத்துநிற்கும் லட்ச கணக்கான தொண்டர்களையும் அவர்களின் நல்வாழ்வையும் சுமக்கின்ற பெரிய பொறுப்பு நம் அய்யா அவர்களின் தோள்களில் விழுந்தது மக்கள் தலைவர் அய்யா அவர்கள் வளர்த்தெடுத்த இயக்கம் தன்மானத்திற்கு ஒரு சிறு நெருடல் ஏற்பட்டபோது மானம் பெரிதென்று மக்கள் தலைவரால் தொடங்கப்பட்டு இன்று தமிழகத்தின் தலை எழுத்தை நிர்ணயிக்கின்ற சக்தியாக வளர்ந்து நின்ற இயக்கம் இனி கட்டிகாக்க ஆல் அற்று சிதறும் என்ற விமர்சனங்களை புறம் தள்ளி மக்கள் தலைவரின் மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை தன் ஆளுமையால் நிரப்பினார் நம் மக்கள் தளபதி அய்யா அவர்கள் காமராஜரின் மரணத்திற்கு பின் உண்டான இதே போன்றதோர் வெற்றிடத்தை முன்னர் வெற்றி கரமாய் நிரப்பியவர் நம் மக்கள் தலைவர் அய்யா அவர்கள் புலியின் பிள்ளை பூனை ஆகுமா ஆதலினால் தான் நம் மக்கள் தளபதி அவர்கள் தன் மீது எழுந்த விமர்சனங்களை பொய்யாக்கி தன்னை இன்று தமிழகத்தில் காங்கிரஸின் தன்னிகரற்ற தலைவராக நிலைநிறுத்த முடிந்தது அய்யா அவர்கள் தலைமை பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் தமிழக உள்ளாட்சி தேர்தலை ஆ தீ மு க கூட்டணியுடன் எதிர் கொண்டு தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து கூட்டணியை வெற்றிபெற செய்தார் பின் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுபயணம் மேற்கொண்டு தொண்டர்களிடம் உரையாடி மனநில்யை அறிந்து கட்சியை திறன்பட வழிநடத்தினார் அய்யா அவர்களுக்கு தலைமை பொறுப்பு மலர் பாதையாக இல்லை மாறாக முற்களும் துரோகிகளும் நிறைந்த பாதை தான் இருந்தது பின் மக்கள் தலைவரின் ஆசை படி அன்னை சோனியா காந்தி அவர்களின் முன்னிலையில் மதுரையில் நடைபெற்ற மிக பிரமாண்ட விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது அதன் பின் மக்கள் தளபதி அவர்களின் பங்களிப்பும் எந்த ஒரு எதிர்பார்பும் அற்ற எண்ணற்ற தொண்டர்களின் உழைப்பாலும் தமிழகத்தில் மீண்டும் காங்கிரஸ் உயிர் பெற்றது மக்கள் தளபதி அய்யா அவர்கள் காங்கிரஸ் அகில இந்தியா செயலாளராக பணியாற்றினார் பின் தமிழகத்தில் காங்கிரசை புத்துயிர் ஊட்ட தமிழ்நாடு தலைவராக நியமிக்கப்பட்டார் அய்யா அவர்கள் தலைவரை பணியாற்றிய மூன்று ஆண்டுகளும் தமிழகத்தில் காங்கிரஸ் மிக சிறந்த முறையில் செயல் பட்டது அதன் பின் தொண்டர்பலமற்ற காவடி தூக்கி கும்பலால் நம்அணி பின் தளபட்டோம் ஆனால் மக்கள் கடந்த தேர்தலில் அந்த பதர்களுக்கு நல்ல பாடம் புகட்டி விட்டார்கள் அதன் பின் தான் அகில இந்திய தலைமையும் நம் அய்யாவின் பலத்தை உணர்ந்து கப்பல் போக்குவரத்து அமைச்சராகி அழகுபடுத்தி இருக்கிறது இனி நம் மக்கள் தளபதி அய்யா அவர்கள் சுட்டி கட்டும் ஒருவரை தமிழகத்தின் தலைவராய் நியமித்தல் நம்மால் மீண்டும் காமராஜர் அட்சி என்னும் கனவை எட்ட முடியும்
வளமான தமிழகம்
வலிமையான பாரதம்

மத்திய அமைச்சர் வாசனின் எளிமை : டில்லி பங்களாவில் குடியேற மறுத்தார் -தினமலர்


மக்கள் தளபதி அய்யா அவர்களின் எளிமை பற்றி தினமலர் நாளிதழில் வெளியான சிறப்பு செய்தி
மத்திய அமைச்சர் வாசனின் எளிமை : டில்லி பங்களாவில் குடியேற மறுத்தார் -தினமலர்
மத்திய அமைச்சர்கள் , லோக்சபா எம்.பி.க்கள் அனைவரும்,தங்களுக்கு டில்லியில் நலதொரு வீடு கிடைக்கவேண்டும் என எதிர்பார்ப்பது வழக்கம் . சொந்த தொகுதியில் சொந்த வீடுகள் எத்தனை இருந்தாலும் , தலைநகரில் வசிக்கும் வீடு வசதியாக இருக்க வேண்டும் என்று விரும்புவர் .
தோல்வி அடைந்த மத்திய அமைச்சர்கள், முன்னாள் எம்.பி.க்கள் சிலர் பதவி போன பிறகும் அந்த வீட்டை காலி செய்யாமல் இழுக்க அடிப்பது வழக்கம் அவர்கள் காலி செய்யும் வரை புதிய எம்.பி.,க்கள் பலர் வீடு கிடைக்காமல் பலர் தமிழக அரசின் விருந்தினர் இல்லத்தில் தங்கி வருகின்றனர் .
இந்நிலையில் மத்திய அமைச்சர் வாசன் காபினெட் அமைச்சர் என்பதால் அவருக்கு தனி பங்கள ஒதுக்கபட்டது அந்த பங்களாவில் அவர் குடியேற மறுத்து விட்டார் எப்போதும் போல் வெஸ்டன் கோர்ட்டில் உள்ள அறையில் தங்கி கொள்வதாக தெரிவித்து விட்டார் .

மக்கள் தளபதியின் ஆற்றல் சபாஸ் ! அமைச்சர் என்று தினமலர் பாராட்டு !


மக்கள் தளபதியின் ஆற்றல் சபாஸ் ! அமைச்சர் என்று தினமலர் பாராட்டு !

மக்கள் தளபதி அய்யா அவர்கள் ஒரு அற்றல் மிகு தலைவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று அவருடைய ஆற்றலும் செயல் திறனும் மீண்டும் ஒருமுறை நீருபிக்க பட்டிருக்கிறது யாரையும் பாராட்டாத குறிப்பாக காங்கிரஸ் கட்சியை கேலி மட்டுமே செய்கின்ற தினமலர் நாளிதழ் மீண்டும் ஒரு முறை நம் அய்யா அவர்களை சபாஸ்!! அமைச்சர் என்று வாழ்த்தி இருக்கிறது
முன்று ஆண்டுகளுக்கும் மேலாக துறைமுக ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள் ஆனால் இது வரையிலும் இருந்த அமைச்சர் அதற்கு செவி சாய்க்கவில்லை இந்நிலையில் தொழிற்சங்கங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிருதத்தில் குதிக்க கூடிய சூழ்நிலை உருவாக வாய்ப்பு ஏற்பட்டது இந்நிலையில் மக்கள் தளபதி அய்யா அவர்கள் இதனை முன் கூடியே உணர்ந்து தொழிற்சங்கங்களை அழைத்து அவர்களது நீண்ட நாள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி வைத்து வேலை நிறுத்த அபாயத்தை தடுத்து நிறுத்தி.
வரும் முன் காப்பவன் புத்திசாலி என்பதற்கு ஏற்ப வருமுன் காத்து வேலை நிறுத்தத்தால் ஏற்பட கூடிய இழப்புகளையும் தவிர்த்து தொழிலார்களின்
நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் இடர்களை களைந்து சபாஸ் !! அமைச்சர் என்று பத்திரிகைகள் பாராட்டையும் பெற்று இருக்கிறார் நம் அய்யா அவர்கள்.
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண்விடல் _ குறள்

என்ற வள்ளுவன் வாக்கிற்கு இலக்கணம் வகுத்து கொடுத்த பணியை செவ்வனே செய்து முடித்திருக்கிறார் நம் அய்யா அவர்கள்
இவன்
என்றும் அய்யா வழியில்
திருவேங்கடம்

இஷ்டப்படி ஒதுக்கீடு செய்து நஷ்டத்தை ஏற்படுத்தினார் ராஜா - மத்திய ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கை

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பான, மத்திய ஆடிட்டர்  ஜெனரலின் அறிக்கை நேற்று அமளியின்  நடுவே பார்லிமென்டின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.

மொத்தம் 77 பக்கங்களை கொண்டிருந்த இந்த அறிக்கையில், அரசுக்கு ஏற்பட்ட இழப்பு, விதிமுறைகள் எப்படி மீறப்பட்டுள்ளன என்பது புட்டுபுட்டு வைக்கப்பட்டுள்ளது.
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து ஆய்வு நடத்திய மத்திய ஆடிட்டர் ஜெனரல் (கேக்),  தனது அறிக்கையை ஜனாதிபதி, பிரதமரிடம்  சமீபத்தில் அளித்து இருந்தார். 
இது பார்லிமென்டில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. கடைசியில்  ராஜாவும் மக்களுக்கு சேவை செய்த பெருமையைக் கூறி  ராஜினாமா செய்ய நேரிட்டது. 

இந்நிலையில், சி.ஏ.ஜி., அறிக்கை பார்லிமென்டின் இரு அவைகளில் தாக்கல் செய்யப்பட்டது.லோக்சபாவில் இந்த அறிக்கையை மத்திய நிதித்துறை இணை அமைச்சரும், தி.மு.க.,வைச் சேர்ந்தவருமான  எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் நேற்று தாக்கல் செய்தார். ராஜ்யசபாவில், நிதித்துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனாவால் தாக்கல் செய்தார்.
மொத்தம் 77 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தரப்பட்ட  விதம், விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளது போன்றவை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய், இழப்பு ஆகியவை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைவதற்கு தீவிர கண்காணிப்பு தேவை. அதற்கான பணியைத்தான் மத்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத்துறை  மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், சி.ஏ.ஜி., அறிக்கையில்   முழு விவரங்களை குறிப்பிட்டு, பின்குறிப்பாக ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், "இந்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடு போல், வேறு எந்த அமைச்சகத்திலோ, அரசின் வேறு துறையிலோ ஏற்பட்டுவிடக்கூடாது  என்ற எண்ணத்திலும், குறைபாடுகளை சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பும் உள்ளது என்ற வகையில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன' என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அறிக்கையில்,  மத்திய தகவல் தொடர்பு அமைச்சராக இருந்த ராஜா, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்காக விதிமுறைகளை மாற்றி வளைத்துள்ளார். பிரதமரின் ஆலோசனையையும் பொருட்படுத்தவில்லை, சட்ட அமைச்சகத்தின் ஆலோசனைகளை கேட்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:* "3ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்காக நடந்த ஏலம் மற்றும் அதில் பங்கேற்ற ஆபரேட்டர்கள் குறிப்பிட்ட விலையை வைத்துதான், 
"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அதிக வருவாய் கிடைத்திருக்குமே என்ற யூகத்தின் அடிப்படையில் பார்த்த போது, இதில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் தெரியவந்தன.
* இந்த துறையின் அமைச்சராக இருந்த ராஜா, விதிகளை மாற்றி, அதாவது வளைந்து கொடுத்து, 2001ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட பழைய நுழைவு வரி பற்றி பரிசீலிக்காமல், 2008ம் ஆண்டில் வந்த புதிய ஆபரேட்டர்களுக்கு ஸ்பெக்டரம் ஒதுக்கீடு செய்துள்ளார். இதில், பிரதமர் கூறிய ஆலோசனையையும் புறக்கணித்துள்ளார்.
*"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட முறை வெளிப்படையாக இல்லை.  மொத்தம் 122 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.   இதில் 85 நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்டு இருந்த தகுதி மதிப்பீட்டை பூர்த்தி செய்யவில்லை. இந்த 85 லைசென்சுகளை 13 கம்பெனிகள் பெற்றுள்ளன.  இந்த கம்பெனிகள், நிர்ணயிக்கப்பட்ட மூலதனத்தைக் கொண்டு இருக்கவில்லை.
* வெளிப்படையான அணுகுமுறை இருக்க வேண்டும் என்ற பிரதமரின் ஆலோசனையும்,  இந்த துறையோடு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் குழுவை கலந்து ஆலோசித்து செயல்படுங்கள் என்று கூறிய நிதி அமைச்சகத்தின் ஆலோசனையும் ராஜா பொருட்படுத்தவில்லை.
* தகவல் தொடர்புத்துறை ஆணையத்தின்(டிராய்)வழிகாட்டு நெறிமுறையின் படியும் நடக்கவில்லை. இந்த விஷயத்தில்,"டிராய்'  கையை கட்டிக் கொண்டு அனைத்து நடவடிக்கைகளையும் வேடிக்கை பார்த்துள்ளது.
* அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்திற்கு முறைகேடாக சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்திற்கு  இரட்டை தொழில்நுட்ப உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
* இரட்டை தொழில்நுட்ப பயன்பாடு விஷயத்தில், 2003ம் ஆண்டு கேபினட் எடுத்த முடிவு மீறப்பட்டுள்ளது.  அவ்வாறு கேபினட் முடிவை மீறும் போது, கேபினட் அனுமதி பெற வேண்டும். அந்த நடைமுறையும்  இங்கே  பின்பற்றப்படவில்லை.
* எவ்வித அனுபவமும் இல்லாத, "ஸ்வான்'  நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முன்னுரிமை பட்டியலில் உள்ள நிறுவனத்திற்கு ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
* ஸ்பெக்ட்ரம் அலைவரிசை என்பது நமது தேசத்தின் அரிதான சொத்து. இது ஏலம் விடப்படவேண்டும்.
* இதில் பங்கேற்ற புதிய ஆபரேட்டர்களுக்கு எவ்வித விதிமுறையும் பின்பற்றப்படாமல், விலையை நிர்ணயம் செய்ததில் அக்கறையின்றி செயல்பட்டுள்ளனர்.
* வேண்டப்பட்டவர்களுக்கு சலுகை அளிக்கவேண்டும் என்பதற்காக கடைசி தேதியை முன்கூட்டியே வருவது போல் மாற்றியமைத்துள்ளனர்.
*கடந்த 2001ம் ஆண்டு விலைப்படி, 51 மண்டலங்களுக்கு, லைசென்ஸ் பெற்ற 13 ஆபரேட்டர்கள் கொடுத்த  விலை ரூ.2,561 கோடி. இதே ஆபரேட்டர்கள் "3ஜி' ஏலத்திற்கு ரூ.12 ஆயிரம்  கோடி முதல் 37 ஆயிரம் கோடி வரை கொடுத்துள்ளனர்.
* தற்போது நடைமுறையில் உள்ள ஆபரேட்டர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் போது நிர்ணயிக்கப்பட்ட அளவை தாண்டி (6.2 மெகா ஹெர்ட்ஸ்)  தகவல் தொடர்பு துறை அனுமதி வழங்கியுள்ளது.
* இரட்டை தொழில்நுட்ப லைசென்ஸ்  35 வழங்கப்பட்டுள்ளன. இதற்கான மதிப்பீட்டு தொகை 1.52 லட்சம் கோடி ரூபாய். ஆனால், உரிமமாக பெறப்பட்ட தொகை. 12 ஆயிரத்து 386 கோடி ரூபாய்.
* ஒதுக்கீடு உரிமம் பெற்ற நிறுவனங்களில் ஒன்றான, ஸ்வான்' நிறுவனம் தனது 45 சதவீத பங்குகளை "எட்டிசேலட்' என்ற ஐக்கிய அரபு நாடுகளை சேர்ந்த நிறுவனத்துக்கு  4,200 கோடி ரூபாய்க்கு விற்றது. யூனிடெக் நிறுவனம் தனது 60 சதவீத பங்குகளை டெலினார் என்ற நார்வே நாட்டு நிறுவனத்துக்கு 6,200 கோடி ரூபாய்க்கு விற்றது. தொலைத்தொடர்புத் துறை லைசென்சை பெற  1,661 கோடி ரூபாய் மட்டுமே  "யூனிடெக்'  கட்டியிருந்தது.  லைசென்ஸ் மற்றொரு நிறுவனமான டாடா டெலிசர்வீசஸ் தனது 26 சதவீத பங்குகளை, டோகோமோ என்ற ஜப்பான் நிறுவனத்துக்கு 13 ஆயிரத்து 230 கோடி ரூபாய்க்கு விற்றது. இந்த பங்குகளை யூனிடெக், ஸ்வான் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் 70,022.42 கோடி ரூபாய்க்கு விற்று பயனடைந்தன. ஆனால், தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு 10,772.68 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தப்பட்டது.  இதனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒன்பது "2ஜி' உரிமத்தில் மட்டும் 60 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"2ஜி' ஸ்பெக்ட்ரம்: ஒரு பார்வை*"2ஜி' லைசென்சுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை, அக்கறையின்றி அள்ளிவீசப்பட்டுள்ளது.
*விதிமுறைகள் வளைக்கப்பட்டுள்ளன; எவ்வித நடைமுறையோ, ஒழுங்குமுறையே பின்பற்றப்படவில்லை
* வேண்டியவர்களுக்கு சலுகை வழங்குவதற்காக, கடைசி தேதி முன்தேதியிடப்பட்டுள்ளது.
*மொத்தத்தில், அரசுக்கு  1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட  அமைச்சர் ராஜாவின் வெளிப்படையில்லாத  அணுகுமுறை  காரணமாயிருக்கிறது.  மேலும், அவர் அள்ளி வழங்கிய  சலுகையில், டேடா காம் ( தற்போது வீடியோகான்). எஸ்-டெல், ஸ்வான் அண்ட் லூப் டெலிகாம்  ஆகிய தொழிலமைப்புகளுக்கு  2008ல் லைசென்ஸ்  தரப்பட்டிருக்கிறது,
* பிரதமர் ஆலோசனையை அவர் மீறி இதை வழங்கியிருக்கிறார். சட்டங்களை மீறி, நடைமுறைகளை மீறி  "2ஜி' லைசென்சுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

*ஸ்வான் டெலிகாம் லைசென்ஸ்: ரூ.1,537 கோடிஇந்நிறுவனம் தனது 45 சதவீத பங்கை விற்றதன் மூலம் ரூ.4,200 கோடி பெற்றுள்ளது.
*மொபைல் சந்தாதாரர் நிலவரம்
 2001 : 40 லட்சம்
 2008 : 35 கோடி
* வருவாய் இழப்பு: ரூ.1.76 லட்சம் கோடி.
* சில நிறுவனங்களுக்கு  லைசென்ஸ் வழங்கப்பட்டது 2008ம் ஆண்டில், விலை நிர்ணயமோ  2001ம் ஆண்டின்படி  செய்யப்பட்டது.
* யூனிடெக் ஒயர்லெஸ் லைசென்ஸ்:ரூ.1,661 கோடி.இந்நிறுவனம் 60 சதவீத பங்கை விற்றதன் மூலம் திரட்டிய தொகை: ரூ.6,200 கோடி.
*அரசுக்கு கிடைத்த வருவாய்: "2ஜி': ரூ.10,772 கோடி.
 "3ஜி':ரூ. ஒரு லட்சம் கோடி.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மீது தயா மாஸ்டர் புகார்: இந்திய ஒப்பந்தத்தை ஏற்காததால் நிலைமை மோசமாகி விட்டது

                                  
விடுதலைப்புலிகள் பத்திரிகை தொடர்பாளராக இருந்தவர் தயா மாஸ்டர். இறுதிப்பேரின் போது தயா மாஸ்டர் ராணுவத்திடம் சரண் அடைந்தார். தற்போது அவர் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து அரசு ஆதரவு டி.வி. நிருபராக செயல்படுகிறார்.
 
இலங்கை போர் தொடர்பாக விசாரித்து வரும் கமிஷனிடம் அவர் ஆஜர் ஆகி சாட்சியம் அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-
 
1987-ம் ஆண்டு இந்தியா- இலங்கை ஒப்பந்தத்தை பிரபாகரன் ஏற்றுக்கொண்டிருந்தால் இந்த பேரழிவுகள் ஏற்பட்டு இருக்காது. அதன் பிறகும் 1990, 1995, 2000-ம் ஆண்டுகளில் இலங்கை அதிபர்கள் சமரச தீர்வுகளுக்கு முன்வந்தனர். அதையும் பிரபாகரன் நிராகரித்துவிட்டார். இதனால்தான் ஏராளமான மக்கள் பலியாகும் நிலை உருவாகிவிட்டது.
 
2002-ம் ஆண்டு போர் ஒப்பந்தத்தை விடுதலைப்புலிகள் மீறினார்கள். 4-வது ஈழப்போர் தொடங்கிய நேரத்தில் விடுதலைப்புலிகள் மூத்த தலைவர்கள் அனைவரும் சேர்ந்து பிரபாகரனுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள்.

அதில் அமைதியான தீர்வு காணும்படி கேட்டுக்கொண்டிருந்தனர். இதனால் பேரிழிவுகள் தவிர்க்கலாம் என்றும் கூறி இருந்தனர். ஆனால் பிரபாகரன் இதை கண்டு கொள்ளவே இல்லை.
 
இறுதி போர் காலத்தில் பொதுமக்கள் பாதிக்காமல் இருக்க போர் இல்லாத பகுதியாக சில இடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தன. ஆனால் இதை விடுதலைப்புலிகள், இலங்கை ராணுவம் யாருமே மதிக்கவில்லை. இதனால்தான் ஏராளமான பொதுமக்கள் பலியானார்கள்.
 
இப்போது போர் முடிந்துள்ள நிலையில் ஈழ தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும். கைதான விடுதலைப்புலிகள் விடுதலை செய்ய வழி காணப்பட வேண்டும். காணாமல் போனவர்களும் கண்டுபிடிக்க வேண்டும்.
 
இவ்வாறு தயா மாஸ்டர் கூறினார்.