Wednesday, February 2, 2011

ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடும்பயணம்!





ஈழத் தமிழர் விடுதலைக்கான நெடும்பயணம்!
January 16,2011
(01) “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்”,
(02) ’1948ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழர் பகுதிகளில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை (முப்பது இலட்சம் சிங்களக் குடியேற்றவாசிகளை) வெளியேற்ற வேண்டும்”
-என்ற இரு கோரிக்கைகளை மட்டும் முன்வைத்து கால் நடையாக இந்தியாவின் எட்டு மாநிலங்கள் ஊடாக 2500 கிலோ மீற்றர் தூரம் ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) மேற்கொள்ளும் நெடும் பயணம் இன்று காலை பத்துமணி அளவில் ஸ்ரீபெரும்புதூpல் உள்ள அமரர் இராஜீவ்காந்தி நினைவு மண்டபத்திலிருந்து தொடங்குகிறது.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்றச் செயலலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும். காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினருமாகிய உயர்திரு. இரா. அன்பரசு அவர்கள் இந்த நெடும் பயணத்தை ஆரம்பித்து வைக்கிறார்.
இந்த நெடும் பயணத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் பங்கேற்கிறார்கள். முகாம்களில் இருக்கும் அவர்களது உறவினர்களும் மற்றும் நண்பர்களும் இவர்களை வழியனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள்.
இந்த நெடும் பயணம் வெற்றிபெற தமிழத் தமிழர்களும், உலகில் உள்ள ஈழத் தமிழர்கள் அனைவரும் ஆதரவு வழங்கவேண்டும் என்று ஈழத் தமிழர் சார்பாக ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) கேட்டுக்கொள்கிறது.
நேரம்: காலை 10:00 மணி
நாள் : 16-01-2011 ஞாயிறு
இடம் : ஸ்ரீ ராஜீவ்காந்தி நினைவு மண்டபம், ஸ்ரீபெரும்புதூர்.
“இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்,
1948ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழர் பகுதிகளில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை (முப்பது இலட்சம் சிங்களக் குடியேற்றவாசிகளை) வெளியேற்ற வேண்டும் -
என்ற இரு கோரிக்கைகளை மட்டும் முன்வைத்து கால் நடையாக இந்தப் பயணத்தை மேற்கொள்கிறோம். இந்திய நாடு உலகுக்குப் போதித்த அகிம்சை வழியில் எங்களை வருத்தி நிரந்தரத் தீர்வுக்காக மேற்கொள்ளும் இந்த விடுதலைக்கான நெடும் பயணத்துக்கு ஆறுபேர் கொண்ட குழு தலைமை ஏற்று வழி நடத்துகிறது.
(01) திரு. மங்களராஜா அவர்கள் (மட்டக்களப்பு)
(02) திரு. தயாபரன் அவர்கள் (திருகோணமலை)
(03) திரு. ஞானராஜா அவர்கள் (கிளிநொச்சி)
(04) திரு. வசீகரன் அவர்கள் (யாழ்ப்பாணம்)
(05) திரு. அகதா அவர்கள் (திருகோணமலை)
(06) திரு. கிறேசியன் அவர்கள் (யாழ்ப்பாணம்)
இந்தியாவின் எட்டு மாநிலங்களின் ஊடாக மேற்கொள்ளவிருக்கும் இந்த நடைபயணம் 2500 கிலோ மீற்றர் தூரத்தைக் கடக்க வேண்டியுள்ளது.
இந்த நெடும்பயணத்தில் கலந்துகொள்பவர்களது உடல் தகுதிகள் 09-01-2011 ஞாயிறு அன்று மருத்துவர்களைக் கொண்டு பரிசோதிக்கப்பட்டது. இதில் கலந்து கொள்வபவர்கள் தமிழகம், ஒரிசா மாநிலத்தில் அகதி முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களும் மற்றும் முகாம்களுக்கு வெளியே வசித்துவரும் ஈழத்தமிழர்களும் அடங்குவர்.
இந்த நெடுந்தூர நடைப்பயணத்துக்கு தலைமையேற்றிருக்கும் குழுவின் பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
(01) சென்னை முதல் டெல்கிவரை நடைபயணத்தின் போது தலைமை மற்றும் முடிவெடுக்கும் அதிகாரம் திரு. மங்களராஜா அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
(02) அனைத்துவகையான நிதிப் பகிர்வு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக்கான அதிகாரம் திரு. தயாபரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
(03) நடைபயணத்தை வழிநடத்திப் பயணிக்கும் பொறுப்பு திரு.ஞானராஜா அவர்களுக்கு வழங்கப்பட்டள்ளது.
(04) அனைத்து மாநிலங்களுக்குமான தொடர்புகள் மற்றும் பாதுகாப்புக்கான அதிகாரம் திரு.வசீகரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
(05) நடைபயணம் மேற்கொள்ளும் அனைவருக்குமான தேவைகளைப் ப+ர்த்தி செய்வது மற்றும் மருத்துவத்துக்கான பொறுப்பு திரு. கிறேசியன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
(06) உணவு குடிநீர் மற்றும் தங்கும் வசதிகளை ஏற்படுத்துவதற்கான பொறுப்பு திரு. அகதா அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆறுபேர் கொண்ட தலைமைக்குழு தினமும் கூடிக் கதைப்பார்கள்! அங்கத்தினர் நோய்வாய்ப் பட்டால் அவர்களைக் கவனிப்பது, மருத்துவ உதவிகள் வழங்குவது போன்றவற்றுக்கு மருத்துவக்குழு ஒன்று பயணம் செய்கிறது.
சமைப்பது, பரிமாறுவது, குடிநீர் வழங்குவது, சிற்றுண்டி, தேனீர் வழங்குவதற்கான ஏற்பாடுகளை அதன் பொறுப்பு வாய்ந்தவர்கள் செய்து முடிப்பார்கள்.
ஓவ்வொரு மாநிலங்களின் எல்லைகளைத் தாண்டும் போது சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு நாங்கள் தகவல் கொடுக்க வேண்டும்.
தமிழ் நாட்டிலிருந்து புறப்படும் நடைபயணம், ஆந்திரா, மகாராஸ்ட்ரா, மத்தியப் பிரதேஸ், உத்திரப் பிரதேஸ், ராஜஸ்தான், அரியானா, டெல்கி ஆகிய மாநிலங்களின் ஊடாக நடைபயணம் மேற்கொள்ள வேண்டும்.
டெல்கியைச் சென்றடைந்ததும், எங்களுடைய கோரிக்கைகளை இந்திய ஜனாதிபதி, பிரதம மந்திரி, எதிர்கட்சித் தலைவர், காங்கிரஸ் தலைவர், பி.ஜே.பி. தலைவர் இடது சாரிக் கட்சிகளின் தலைவர்கள், மற்றும் பிற கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து கையளிக்கவுள்ளோம்.
எங்களது இனம் மறைமுகமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துவதுடன், உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி வேண்டுவது மட்டும் அல்லாமல் அவற்றுக்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படும். ஓவ்வொரு நாளும் தமிழ் இனத்தை அழிப்பதற்கான பணிகளை சிங்கள நிர்வாகமும் இராணுவமும் இணைந்து செயல்படுவதை தெளிவாக எடுத்துரைத்து விளக்குவதுடன், இனவாத அரசிடமிருந்து எங்கள் இன மக்களை விடுவிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
நன்றி!
இவ்வண்ணம்,
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி!