Tuesday, June 23, 2009

மக்கள் தலைவரின் வாழ்க்கை குறிப்பு



பெயர் : ஜி.கருப்பையா மூப்பனார்
தந்தை பெயர்: கோவிந்தசாமி மூப்பனார்
தாயார் பெயர்: சரஸ்வதி அம்மாள்
பிறந்த நாள் :19.08.1931
சொந்த ஊர்: கபிஸ்தலம்
மனைவி பெயர் :கஸ்தூரி அம்மாள்
மகன் பெயர்: ஜி.கே.வாசன்
மகள் பெயர்: உஷா ராணி
மறைவு :30.08.2001.
வகித்த பதவிகள்: தியாகராஜா ஆராதனை அறக்கட்டளை தலைவர்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்
அகில இந்தியா காங்கிரஸ் பொது செயலாளர்
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் பல
கல்வி:இளங்கலை வரலாறு




மக்கள் தலைவரை பற்றி கவிஞர் வாலி எழுதிய கவிதை


நீ உலா வரும் வாகனத்திற்கு
இரண்டு சக்கரம் !
நீ பயணிக்கும் சைக்கில்
என்றுமே
பஞ்சராகாது அது
கல்லிலும் முள்ளிலும் பயணித்தாலும்
காற்று போகாது !
உன்னோடு ஒத்து போகிறவர்களை -உன்
பைக்கில்
பின் சீட்டில் ஏற்றிக்
கொள்கிறாய்:
பிரச்சனை வந்தால்
பார்ட்டியை மாற்றிக்
கொள்கிறாய்!
ஏன்எனில் உனக்கு
எப்போதும் முக்கியமானது
சீட்டு பிரச்சனை அல்ல:
நாட்டு பிரச்சனை !!

Tuesday, June 9, 2009

மக்கள் தலைவர் என்னும் மனிதருள் மாணிக்கம்




நம் தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு பின் உருவான தலைவர்களில் மக்கள் தலைவர் ஐயா அவர்கள் மட்டுமே ஓர் அனைத்திந்திய தலைவராக இருந்தார் பெருந்தலைவரின் சிடராகவும் அன்னை இந்திராகாந்தி அவர்களின் நம்பிக்கை குரிய தளபதியாகவும் கடைசி மூச்சு வரை காங்கிரஸ்காரராக பெருந்தலைவரின் எளிமை , தூய்மை , நேர்மை இவற்றின் எடுத்துக் காட்டாய் பொதுவாழ்வின் அரசியல் நாகரிகத்தின் எடுத்துகாட்டை வாழ்ந்த நம் இதய தலைவர் ஐயா அவர்கள் விட்டு சென்ற மிகப்பெரிய சொத்து நம் மக்கள் தளபதி ஐயா அவர்கள் தான் . இன்று அகில இந்திய தலைமை நம் ஐயா அவர்களின் பலத்தை நன்றாக புரிந்து கொண்டுள்ளது அதனால் தான் ஐயா அவர்களுக்கு கப்பல் போக்குவரத்து துறை வழங்கி கௌரவித்து இருக்கிறது மேலும் தமிழக காங்கிரஸ்இன் புல்லுருவி தலைவர்கள் இந்த தேர்தலில் மக்களால் துரத்தி அடிக்க பட்டிருகிறார்கள் இதன் முலம் தமிழகத்தின் உண்மையான மக்கள் தலைவர் யார் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி புலனாகி விட்டது நம் ஐயா அவர்களின் வெற்றி பயணம் இவ்வாறு தொடர்ந்தால் மிக விரைவில் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை நம்மால் ஏற்படுத்த முடியும் மீண்டும் தமிழகத்தில் நல்லதோற அட்சி உண்டாகும்