Monday, December 26, 2011

காங்கிரஸ் கட்சியின் 127-ம் ஆண்டுவிழா: ஞானதேசிகன் வேண்டுகோள்


கட்சியின் 127-வது ஆண்டுவிழாவை நெஞ்சை நிமிர்த்தி, தலைநிமிர்த்தி சிறப்புடன் கொண்டாட வேண்டும் என்று அக்கட்சியின் தமிழகத் தலைவர் ஞானதேசிகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: 1885 ஆம் ஆண்டு தொடங்கிய காங்கிரஸ் பேரியக்கத்திற்கு 126 வயது முடிந்து 127 ஆம் ஆண்டில் காலெடுத்து வைக்கிறது. உலக அரசியல் வரலாற்றில் இத்தனை ஆண்டுகள் நிலைத்து நிற்கின்ற அரசியல் இயக்கம் காங்கிரஸ் ஒன்று தான்.மகாத்மா காந்தி, பண்டித நேரு, இந்திரா காந்தி, நேதாஜி, பாலகங்காதர திலகர், காமராஜர், முத்துராமலிங்கத் தேவர், தந்தை பெரியார் போன்று இந்தியத் திருநாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் எண்ணற்ற தலைவர்களை இந்நாட்டின் சுதந்திரப் போர்க்களத்திற்கு - நாட்டை வழிநடத்துவதற்கு தந்த இயக்கம் காங்கிரஸ்.இன்னும் எண்ணற்ற தியாகிகள் தியாகங்கள் பல புரிந்து தங்களையே இழந்து இன்றைக்கு மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுத் தர தலமாக அமைந்தது காங்கிரஸ் பேரியக்கம்.சுதந்திரத்திற்குப் பிறகு இந்த தேசத்தை வழிநடத்திய நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, இன்றைக்கு மன்மோகன்சிங் தலைமையிலான மைய அரசை வழிநடத்திக் கொண்டிருக்கும் சோனியா காந்தி வரை உள்ள இந்த இயக்கத்தின் நீண்ட வரலாறு நாமெல்லாம் பெருமை கொள்ளக் கூடிய வரலாறு.இந்த இயக்கத்தை கட்டிக்காக்க வேண்டிய பொறுப்பும், மீண்டும் நமது இயக்கத்தை தமிழகத்தின் உன்னதமான முதல் இயக்கமாக மாற்ற வேண்டிய கடமையும் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.இதை நினைவில் கொண்டு காங்கிரஸ் பேரியக்கம் வருகிற 28-ந் தேதி 127-வது ஆண்டில் கால் வைக்கிற அன்று மாநகராட்சிகள், நகரங்கள் மற்றும் கிராமங்களில் கொடி ஏற்றி வைத்து இந்த இயக்கத்தின் உன்னத வரலாற்றையும், தலைவர்களின் தியாகத்தையும், காங்கிரஸ் அரசு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு நிறைவேற்றி வருகிற திட்டங்களையும் மக்கள் மத்தியில் நினைவுறுத்த வேண்டும் என்பதோடு, நான் ஒரு காங்கிரஸ் உறுப்பினர் என்ற பெருமிதத்தோடு நெஞ்சை நிமிர்த்தி, தலைநிமிர்த்தி அந்நன்னாளை கொண்டாடிட வேண்டுமென்று அனைத்துகாங்கிரஸ் நண்பர்களையும் அன்புடன் வேண்டுகிறேன்.

Thursday, December 8, 2011

தமிழக முதல்வரின் தடுமாற்றம்!!!


தமிழக முதலவர் ஜெயலலலிதா அவர்கள் துணிச்சலும், தன்னம்பிக்கையும் உடையவர், தனது நிலைப்பாட்டில் உறுதியாய் இருப்பவர், எந்த விமர்சனங்களுக்கும் அஞ்சாதவர், திடமான முடிவுகள் எடுப்பவர் என்பது தான் இன்று வரை மக்கள் அனைவரின் நம்பிக்கையாக இருந்தது, கடந்த காலங்களில் அவரது இதே நிலைப்பாடும், செயல்களும் நிறைய விமர்சனங்களுக்கும் பாராட்டுகளுக்கும் ஆளாகியது. மக்களும் ஜெயலலிதா அவர்களிடம் அதை தான் எப்போதும் எதிர்பார்த்தார்கள், பார்கிறார்கள் அந்த உறுதியை பால் மற்றும் பஸ் கட்டண உயர்வை வாபஸ் பெறாததில் மட்டும் தான் இப்போது பார்க்க முடிகிறது.
அவருடைய அரசியல் பயணத்தின் உச்சமாக அவர் முதன் முதலாக தமிழக முதல் அமைச்சர் ஆன பொழுது அவரிடம் வேகம் மட்டும் தான் இருந்தது விவேகம் இல்லை, எவ்வளவு நல்ல திட்டங்கள் இருந்தாலும் அவை மக்களை சென்று சேரவில்லை. துணிச்சலை விட அகந்தை மேலோங்கி படாடோபம், பிரம்மாண்டம் என்று மக்களின் வெறுப்பை சம்பாதித்து அடுத்த தேர்தலிலே படுதோல்வியை சந்தித்தார். வழக்கு, சிறைவாசம் எல்லாம் அவரை நிச்சியமாக கொஞ்சம் பண்படுத்தியது என்று சொல்லலாம் அடுத்த பொது தேர்தலிலே மக்கள் தலைவர் அய்யா ஜி.கே.மூப்பனார் அவர்களின் வீட்டிற்கே சென்று அதரவு கோரினார், அய்யாவின் ஆதரவோடு தேர்தலில் வென்று முதல் அமைச்சர் ஆனார்!!!
அவரது பழைய வேகத்தோடு கொஞ்சம் விவேகமும் கலந்திருந்தது நல்ல ஆட்சியை வழங்கினார் இடையில் எத்தனையோ விமர்சிக்க கூடிய நிலைப்பாடுகளும், நடவடிக்கைகளும் இருந்தாலும் ஒட்டு மொத்தமாக பார்த்தால் நல்ல ஆட்சியை நடத்தினார், ஆனால் கூட்டணி கட்சிகளிடம் அவர் காட்டிய எதச்சதிகார போக்கும் தேவை இல்லாமல் காங்கிரஸ் கட்சியின் மீதும் அன்னை சோனியாவின் மீதும் அவர் வைத்த விமர்சனங்களின் பயனால் கூட்டணி கட்சிகளின் உறவை இழந்து தேர்தலில் தோற்றார் அனால் தி.மு.க. ஒரு குடும்ப ஏக போகத்தில் மக்கள் மட்டும் அல்லாமல் சொந்த கட்சியின் தொண்டர்கள் கூட வெறுக்கும் நிலைக்கு ஆளானது தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் அமோக வெற்றியை பெற்றது மீண்டும் மூன்றாவது முறையாக ஜெயலலிதா முதல் அமைச்சர் ஆனார் முதலில் அவரது செயல்களில் மாற்றம் தெரிந்தது அது முதிர்ச்சியினால் வந்த பக்குவம் என்றே தோன்றியது அதிலும் அவர் தமிழ் உணர்வாளராக தன்னை காட்டி கொள்ள முயன்றார் அதையும் வியப்போடு நடு நிலையாளர்கள் பார்த்தார்கள் விமர்சிக்க தோன்ற வில்லை காரணம் இலங்கையின் போர்குற்ற விசாரணையை வலியுறுத்தும் சட்டமன்ற தீர்மானத்தில் கூட அவர்கள் விடுதலை புலிகளின் வன்செயல்களை அதிலும் அமரர் ராஜீவ் காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டதையும் அதற்கு காரணம் விடுதலை புலிகள் தான் என்றும் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனை பிடிக்க வேண்டும் என்றும் தான் முன்னர் கொண்டுவந்த தீர்மானத்தையும் நினைவு படுத்தி இருந்தார்கள் அதை நடு நிலையாளர்கள் முதிர்ச்சியின் பக்குவம் என்று பாராட்டி இருந்தார்கள் ஆனால் இப்போதைய முக்கியமான இரு பிரச்சனைகளில் அவரது நிலைப்பாடும் அதில் அவர் தடுமாறுவதும் நமக்கு பக்குவம் அடைந்ததாக தோன்றவில்லை மாறாக பச்சோந்தி ஆகிவிட்டாரோ என்றே தோன்றுகிறது முதலாவது ராஜீவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் அவர்களுக்கு வழங்க பட்ட மரண தண்டனை விவகாரம் மூன்று கொலையாளிகள் மரண தண்டனைக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கிய போது சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற சொன்னபோது எங்களுக்கு அந்த அதிகாரம் இல்லை என்று சொன்ன போது கூட நமக்கு அவரின் மழுப்பல் பச்சோந்தி தனம் புரியவில்லை மறு நாளே சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றி மரண தண்டனையை குறைக்க வலியுறுத்தி நாட்டின் எந்த சட்ட சபை வரலாற்றிலும் இது வரை நடந்திராத கேலி கூத்தை அரங்கேற்றிய பின்பு தான் அது தெளிவாக புரிந்தது இதுவரை எந்த ஜெயலலிதா துணிச்சல் மிக்கவர் விமர்சனகளுக்கு அஞ்சாதவர் என்று இறுமாந்து இருந்தோமோ அதே ஜெயலலிதா தான் தனது புதிய ஸ்வரூபத்தை நமக்கு காட்டினார் ஆனால் இதோடு முடிந்து விடவில்லை அவரது தடுமாற்றம் மரண தண்டனையை குறைக்க வலியுறுத்தி கைதிகள் மூன்று பேரும் தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசு முதல் வாரம் அவர்களின் மனுவை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி விட்டு மறுவாரமே சட்ட சபை தீர்மானத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியது எந்த நடு நிலையாளர்களும் முகம் சுளிக்க வைத்து விட்டது அடுத்த விவகாரம் கூடங்குளம் அணு மின் நிலைய போராட்டம் தமிழகம் மின்சார பற்றாகுறையால் இருளில் தத்தளிக்கிறது தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள சூழ்நிலையில் இயங்குவதற்கு தயார் நிலையில் உள்ள அணு உலையை வெளிநாட்டு சதி போராட்டம் என்ற பெயரால் தடுக்க நினைக்கிறது அணு உலை இயங்கினால் தமிழகத்தின் மின் பற்றாக்குறை நீங்கும் என்று நடு நிலை நாளிதழ்கள் வரிந்து கட்டி எழுதுகின்றன நாட்டின் குழப்பங்களை மட்டுமே விளைவிக்கும் கேடு கெட்ட பத்திரிக்கைகள் மட்டும் எதிர்க்கின்றன இப்படிப்பட்ட சூழ்நிலையில் தீர்க்கமான முடிவெடுத்து போராட்டத்தை ஒடுக்க வேண்டிய பொறுப்புள்ள முதல் அமைச்சராக இல்லாமல் பொறுப்பை தட்டி கழித்து வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறார் பாரத பிரதமருக்கு கூடுதல் மின்சாரம் மத்திய தொகுப்பில் இருந்து கேட்டு கடிதம் எழுதி நாடகம் நடத்திக்கொண்டிருக்கிறார்
முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இனி முன்பிருந்த அதே உறுதி உள்ள ஜெயலலிதாவாக இருக்க தேவை இல்லை ஆனால் தடுமாறுகின்ற இந்த புதிய ஜெயலலிதா எங்களுக்கு நிச்சயமாக தேவை இல்லை நாட்டில் குழப்பத்தை மட்டும் தான் இந்த நாசக்கார தமிழ் உணர்வு கும்பலால் ஏற்ப்படுத்த முடியும் வேறு எதையும் இவர்கள் சாதித்து விடவில்லை பெரியார், அண்ணா, கருணாநிதி, வைக்கோ,ராமதாஸ், திருமா, சீமான், கொளத்தூர் மணி இவர்கள் யாரும் தமிழனுக்கு இது வரை உருப்படியாக எதையும் செய்ததில்லை வேண்டுமானால் நம்மை ஹிந்தி முதலான எந்த பாசையும் கற்க விடாமல் நவோதயா போன்ற சிறந்த கல்வி நிலையங்களில் படிக்க விடாமல் முடக்கியதர்காக பெருமை பட்டு கொள்ளலாம் இது வரையில் இந்த கும்பலிடம் இருந்து நீங்கள் தள்ளி இருந்தீர்கள் அனால் இன்றைக்கு அவர்களோடு நீங்கள் ஒட்டி உறவாடுகிரிர்கள் ஓட்டுக்கள் கிடைக்கும் என்று கனவு கான்கிறிர்கள் அப்படி ஒரு நிலை தமிழகத்தில் இருந்திருந்தால் நிச்சயம் வைக்கோவும் திருமாவும் முதல் அமைச்சர் ஆகி இருப்பார்கள் அல்லது கருணாநிதி நிரந்தர முதல்வர் ஆகி இருப்பார் இன்றைக்கு உங்கள் கட்சி தனி பெரும் கட்சி போல் உங்களுக்கு தெரியலாம் அது அமைதியையும் சமாதானத்தையும் சகோதரதுவதையும் வளர்ச்சியையும்
ஒருமைப்பாட்டையும் விரும்பும் நடு நிலை உள்ளங்கள் உங்களுக்கு அளித்த அதரவு என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்