Monday, January 16, 2012

பாவம் பாரதிய ஜனதா கட்சி தான் தேசிய கட்சி என்பதை கூட மறந்து விடுவார்கள் போல ஜெயலலிதாவை பிரதமராக ஏற்றுக்கொள்ள கூட தயாராகிவிட்டார்கள் யாராவது தயவு செய்து எதை தின்றால் பித்தம் தெளியும் என்று திரியும் அத்வானியிடம் அன்னா ஹசாரே பாபா ராம்தேவ் போன்ற காமெடியன்கள் பின்னால் சுத்தாமல் உருப்படியான ஆரோக்கியமான அரசியலை செய்ய சொல்லுங்கள் அப்போது தான் கட்சியை வளர்க்க முடியும் நாட்டிற்க்கு இதுவரை எந்த நல்லதையும் பா.ஜ.க செய்தது இல்லை மக்களை மத ரீதியாக பிளவு படுத்தியதை மட்டும் தான் தங்கள் சாதனையாக சொல்ல முடியும் தேசிய அரசியலில் நல்ல கட்சிகள் வளர்ந்தால் தான் நல்ல ஆட்சியை வழங்க முடியும் காங்கிரஸ் தேசிய அரசியலில் உள்ள ஒரே சிறந்த கட்சி அதற்க்கு இணையாக ஒரு கட்சி கூட இல்லை அதனால் தன்னை நல்ல கட்சியாக பா.ஜ.க வளர்த்து கொள்ள வேண்டும் அப்போது தான் தேசிய நீரோட்டத்தில் ஆரோக்கியமான அரசியல் நடக்கும் இல்லை என்றால் பா.ஜ.க இதே அழுக்கு அரசியலை செய்து நாட்டையும் மக்களையும் அரசியல் தெரியாத வரலாறு தெரியாத அப்பாவி இளைங்கர்களை தூண்டி விடும்
நடை பெற உள்ள ஐந்து மாநில தேர்தல்களில் உத்தர பிரதேசத்தை தவிர மற்ற அணைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெரும் உ.பி யில் பாரதிய ஜனதாவை பின்னுக்கு தளி கண்டிப்பாக மூன்றாவது இடத்தை பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு தான் அன்னா ஹசாரே குழுவினர் பிரசாரத்திற்கு செல்ல வில்லை

Tuesday, January 3, 2012

நாகையில் ஜி.கே.வாசன் நேரில் ஆய்வு

நாகப்பட்டினம் : நாகை மாவட்டத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : தானே புயலால் நாகை, கடலூர், திருவாரூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன; அறுவடை காலத்தில் விவசாயிகள் லாபத்தை எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் புயலால் பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன; இது விவசாயிகளை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது; விவசாயிகளின் இந்த தாங்க முடியாத துயரத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க துணை செய்வோம்; நிவாரண பணிகள், சீரமைப்பு பணிகள், நிவாரண கணக்கெடுப்பு பணிகளை தமிழக அரசு விரைந்து மேற்கொண்டு வருகிறது; இதனை போர்க்கால அடிப்படையில் விரைந்து மேற்கொள்ள தமிழக அரசை வலியுறுத்துவோம்; மேலும் அத்தியாவசிய பொருட்களான குடிநீர், மின்சாரம் ஆகியவற்றை விரைவில் வழங்கவும் தமிழக அரசை வலியுறுத்துவோம்; நாளை டில்லியில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழகத்தில் ஏற்பட்ட புயல் சேதம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவிக்க உள்ளேன்; தமிழகத்திற்கு தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க பிரதமரிடம் வலியுறுத்த உள்ளேன். இவ்வாறு வாசன் தெரிவித்துள்ளார்.