Sunday, May 10, 2015

நாங்கள் சாதிக்க பிறந்த கட்சி !!!

எங்களை சாதிக்கட்சி என்று சொல்லும் அருமை தாயாதிகளுக்கு:
நாங்கள் உண்மையில் தமிழகத்தின் அனைத்து சாதியினரும் சமமாக பிரதிநிதித்துவம் பெற்று இருக்கும் கட்சி அதனால் எங்களை சாதிக்கட்சி என்று சொல்கிறிர்களா?
நீங்கள் டில்லிக்கு காவடி தூக்குவதிலும் கூட்டணி கட்சிகளிடம் கட்சியை தொடர்ந்து அடகு வைத்து நீங்கள் சுகவாசிகளாக வாழ்வதற்காக கட்சியை கடை நிலைக்கு கொண்டுவந்தது பொறுக்காமல் காலத்தால் காமராஜர் ஆட்சி என்பது கனவாகிவிடக்கூடாது என்று தொடங்கப்பட்ட பேரியக்கம் சாதிக்கட்சி என்றால் குஷ்புவை வைத்துக்கொண்டு கூத்தாடி நாடகம் நடத்தும் நீங்கள்?
இந்த கட்சியில் தான் 90 வயதை கடந்த தியாகி முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி லட்சுமி காந்தன் பாரதியும்,  பாரமலையும், எஸ்.ஆர்.பி யும்,  முனைவர் பிச்சை யும் காமராஜரை வழி ஒற்றி வந்தவர்களும் இருக்கிறார்கள் அவர்களும் சாதிக்கட்சியின் அங்கத்தினரா?
மக்கள் தலைவரை அன்னை இந்திராவும் , அமரர் ராஜிவும், அன்னை சோனியாவும் மற்றும் இந்தியதேசத்தின் பெரும் தலைவர்களும் மூப்பனார் என்று தான் அழைத்தார்கள் அதுவே அவர் காலத்தில் தொடங்கப்பட்ட எங்கள் இயக்கத்திலும் நிலைத்துவிட்டது ஏன் காங்கிரஸ் ஸ்தாபன காங்கிரஸாகவும் இந்திரா காங்கிரஸாகவும் இருந்தது உங்களுக்கு தெரியாதா?
உங்கள் லட்சியங்களை நீங்கள் மறந்துவிட்டீர்கள் நாங்கள் அதை முன்னேடுக்கிறோம் எனது சந்தேகம் இப்போது ஒன்று தான் உண்மையில் நீங்கள் எங்களை எதிர்க்கிறீர்களா இல்லை காமராஜர் ஆட்சியை கொண்டுவர துடிக்கும் எங்கள் லட்சியத்தை எதிர்க்கிறீர்களா?
உண்மையில் நாங்கள் சாதிக்க பிறந்த கட்சி

குஷ்புசெய்த தியாகம் அல்லது சேவை என்ன?

காமராஜர் காலத்திலிருந்து கட்சிக்காக பாடுபடும் குமரியாரையும் யசோதா அவர்களையும் பின்னுக்கு தள்ளி இடம் பிடிக்கும் அளவிற்கு காங்கிரஸிற்க்கு அல்லது இளங்கோவனுக்கு குஷ்புசெய்த தியாகம் அல்லது சேவை என்ன பங்காளிகளே ஆனால் நான் வருந்தும் அளவிற்கு கூட அவர்கள் இருவரும் வருந்தவில்லை போல அதே மேடையில் சிரித்துக்கொண்டு நிற்க்கிறார்கள். 128 ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க  இயக்கம் சத்தியமூர்த்தியும்,  காமராஜரும், வ.உ.சியும், தமிழ்தென்றல் திரு.வி.கவும், கக்கனும், ராஜாஜியும், பாரதியும், கல்கியும், ஜெயகாந்தனும், மக்கள் தலைவரும், சி. சுப்பிரமணியமும், பக்தவத்சலமும், ஒ.வி. அலகேசனும், ராமசாமி ரெட்டியாரும்,  கே.பி. சுந்தராம்பாளும், குமாரசாமி ராஜாவும், செல்லப்பாண்டியனும், பொன்னம்மாளும் வளர்த்த  இயக்கம் இன்று பல்வேறு விமர்சனங்களுக்கு ஆட்பட்ட ஒரு நடிகையிடம் கொஞ்சம்கொஞ்சமாக அடகு வைக்கப்படுகிறது கட்சியின் மூத்ததலைவர்களுக்கு தரப்படாத மரியாதை இவருக்கு தரப்படுகிறது உண்மையில் இதை எப்படி சகித்திருக்கிறார்கள் அந்த மூத்தவர்கள் என்று தெரியவில்லை எல்லாவற்றிர்க்கும்  காரணம் பதவி ஆசைதானா அப்படித்தான் இருக்கும் வேறேன்ன

என் தலைவன்

என் தலைவனை முகஸ்துதிக்காகவாவது வானளாவ புகழாதவனும் என் தலைவனால் ஆதாயம் அடையாதவனும்தமிழக  காங்கிரஸில் இல்லை இதைமறுப்பவர் யார்?