Wednesday, December 10, 2014

புதிய பயணம்! புதிய விடியல்!!!

புதிய பயணம்! புதிய விடியல்!!!
மக்கள் தளபதி ஐயா ஜி.கே. வாசன் அவர்கள் தமிழரின் நலம் மற்றும் தமிழகத்தின் நலம் காக்க மீண்டும் காமராஜர் ஆட்சி என்பது தான் தீர்வு என்ற உயரிய நோக்கம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கி சோர்ந்திருந்த தேசிய நெஞ்சங்களின் துயிளை களைத்து இருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தின் தேசிய நெஞ்சங்களில் தமிழ் மாநில காங்கிரஸ் தேவை என்ற எண்ணம் வளர்ந்து வந்தது சமீப காலங்களில் தேசியத்திற்கும் மிக பெரிய அச்சுறுத்தல் எழுந்துள்ளது என்பதும் உண்மை இந்த சூழ்நிலைகளில் தான் மக்கள் தளபதி அய்யா ஜி.கே.வாசன் அவர்கள் புதிய விடியலை நோக்கிய புதிய புரட்சி பயணத்தை துவக்கி இருக்கிறார் கடும் உழைப்பை அனைவரும் சேர்ந்து வழங்கினால் நம் மக்கள் தளபதி ஐயா அவர்கள் நிச்சயம் தமிழக முதல்வர் அரியணையை அலங்கரிப்பார்