Tuesday, August 16, 2011

ஈழமும் தமிழக அரசியலும்

அன்புள்ள கருணாநிதி, ராமதாஸ், திருமா, சீமான், கொளத்தூர் மணி, கீ.வீரமணி மற்றும் அனைத்து தமிழ் உணர்வாளர் என்று சொல்லிக்கொள்பவர்களே உங்களால் இதுவரை ஈழ தமிழர்களுக்கு கிடைத்த ஒரே ஒரு நன்மையை சொல்லுங்கள் பார்க்கலாம்!!! எங்களுக்கும் இவர்களுக்கும் கொள்கை வேறுபாடு இருந்தாலும் ஈழ தமிழர்களுக்காக வை.கோ அவர்களும் நெடுமாறன் அவர்களும் செய்த தியாகங்களை வரவேற்கிறேன் அவர்கள் பட்ட கஷ்டங்களை வேறு எந்த போலி தமிழ் உணர்வாலனும் பட்டதில்லை.
ஈழ தமிழர்கள் விசயத்தில் காங்கிரஸ், ஆ.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகளின் தீர்வு கொள்கை ஒன்று தான் வை.கோ, மற்றும் பல.நெடுமாறன் இதற்கு எதிரான தீர்வை சொல்கிறார்கள்
தமிழ் ஆர்வலர்கள் என்ற பெயரில் போராட்டங்கள் நடத்துவது எல்லாம் உலகெங்கும் வாழும் புலம் பெயர் தமிழர்களை ஏமாற்றி பணம் பறித்து பங்கு போட்டு கொள்ள தான் வேறு எதற்காகவும் அல்ல

Sunday, August 7, 2011

அப்துல் கலாமும் இந்திய வல்லரசும் !!!

அன்புக்குரிய அப்துல் கலாம் அவர்களே அணு ஆயுதங்களை வைத்து இருப்பதாலும் ஏவுகணைகளை கொண்டிருப்பதாலும் கனவுகள் கான்பதாலும் மட்டுமே இந்திய வல்லரசு ஆகி விட முடியுமா ஏன் ஊரை ஏமாற்றுகிறிர்கள் பாவம் இந்த ஆட்டு மந்தைகள் உங்களுக்கு தலை ஆட்டுகின்றன. அணு ஆயுதங்களை கொண்டிருப்பதாலும், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகளை கொண்டிருப்பதாலும் மட்டுமே இந்திய வல்லரசு ஆகிவிடும் என்று கனவு கண்டு சொன்ன அப்துல் கலாம் அவர்களே நாட்டின் இன்றைய மின் தேவைக்கு கூடங்குளம் அணு உலை தேவை என்று ஏன் சொல்லவில்லை ?
நான் மறுபடி மறுபடி சொல்வதெல்லாம் இன்றைய தலைமுறையினரிடம் தக்க அரசியல் அறிவோ விழிப்புணர்வோ இல்லாதது முக்கியமாக இது போன்ற அரசியல் கோமாளிகளுக்கும் ஊடகங்களுக்கும் மிகபெரிய வசதியாக போய்விட்டது அதனால் தான் எதாவது உளறுபவர்களுக்கு கூட இன்று கூட்டம் கூடுகிறது அதிலும் குறிப்பாக தனை அரசியல்வாதிகளுக்கு எதிரானவனாகவும் இந்த தேசத்தை வலப்படுதிட வந்தவனாகவும் காட்டி கொண்டால் போதும் எல்லோரும் உங்களுக்கு சலாம் சொல்வார்கள் ஒரே ஒரு நிபந்தனை எப்படியாவது இந்தியாவில் இருக்கின்ற பெரிய ஊடகங்களை நீங்கள் வசியப்படுத்தி கொண்டால் போதும் அதற்க்கு ஒன்றும் பெரிய நிபந்தனிகள் இல்லை அவர்களின் வியாபாரம் உங்களால் இன்னும் சிறப்பாக நடந்தால் போதும் அவ்வளவு தான்.
அப்துல் கலாம் நல்லா மனிதர் நல்லா விஞ்ஞானி அவரின் நாட்டிற்கான சேவையை யாரும் குறை சொல்ல வில்லை ஆனால் அவரை ஏதோ தீர்க்கதரிசி போலவும் இந்த நாட்டை காக்க வந்தவர் போலவும் புகழ்வதை என்னால் ஏற்று கொள்ள முடியாது அவர் கண்ணை மூடி கொண்டு இந்திய ௨0௨0 ஆம் ஆண்டு உலக வல்லரசு ஆகிவிடும் என்று சொல்வதை ஏற்று கொள்ள முடியாது அதை வல்லரசாக்கும் திட்டங்கள் உங்களிடம் என்ன இருக்கிறது அதை எப்படி செயல் படுத்த போகிறிர்கள் இதற்கான விடைகள் உங்களிடம் இருக்கிறதா கலாம் அவர்களே .
பாரதிய ஜனதா கட்சி தான் நிறுத்தும் குடியரசு தலைவர் வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோற்று விட கூடாது என்ற காரணத்தினால் தான் நீங்கள் குடியரசு தலைவராக பொருபேற்றிர்கள் ஆனால் அந்த ஐந்து ஆண்டுகளில் உங்களிடம் முடிவெடுக்க நிறைய தடுமாற்றங்கள் இருந்தது அதனால் தான் அடுத்த ஐந்து ஆண்டுகள் உங்களை தலைவராக ஏற்க காங்கிரஸ் மறுத்து விட்டது உங்களுக்கு தலைமை என்ற பண்பு கொஞ்சமும் கிடையாது என்பது நல்ல அரசியல் முதிர்ச்சி உள்ள எல்லோருக்கும் தெரியும் ஆனால் அது பாவம் உங்களுக்கு தெரியவில்லை அதனால் தான் மறுபடி ஒரு முறை அந்த பதவியில் அமர ஆசைபட்டீர்கள் அனால் அதற்கு நாட்டின் நலனில் அக்கறை உள்ளவர்கள் எதிராக இருந்தார்கள்.
நீங்கள் தயவு செய்து எதாவது கல்லூரி மாணவர்களுக்கு விஞ்ஞான பாடம் நடத்துங்கள் தயவு செய்து இந்த நாட்டின் அரசியலை குழப்பாதீர்கள் ஏன் என்றால் உங்கள் வழியை ஒற்றி தான் இன்றைக்கு அன்னா ஹசாரே போன்றவர்களும் தங்கள் பங்கிற்கு இந்திய அரசியல் குழப்பி மீன் பிடிக்க நினைக்கிறார்கள்

Saturday, August 6, 2011

அன்னா ஹசாரே நடத்தும் கோமாளி நாடகம்


இன்றைய அரசியல் சூழ் நிலைகளில் இருந்தும் அதற்கும் மக்களிடம் வெளிப்படும் எண்ணங்களில் இருந்தும் ஒன்றை மட்டும் தெளிவாக உணர முடிகிறது மக்களுக்கு அரசியல் தெளிவும் அறிவும் இப்போது சுத்தமாக இல்லை மேலும் வரலாறை யாரும் தெரிந்து கொள்வதில்லை அப்படியே தெரிந்து கொண்டாலும் மேல் புல்லை மேய்ந்த கதையாக தான் இருக்கிறது அவர்களது அரசியல் அறிவு இதற்கு ஒரு நல்ல உதாரணம் சமிபத்திய அன்னா ஹசாரே மற்றும் ராம் தேவ் நடத்திய கோமாளி நாடகங்கள் தான். வரலாற்றை தெளிவாக படிக்காதவர்களும், அரசியலை நன்றாக அறிந்து கொலாதவர்களும் ஊடகங்களை மட்டும் பார்த்து, படித்து, கேட்டு அறிவை வளர்க்கும் அரைவேக்காடுகள் தான் அன்னா ஹசாரே போராட்டத்தை இரண்டாம் சுதந்திர போர் என்று சொல்கிறார்கள் .
முதலில் அன்னா ஹசரேவை காந்தியோடு ஒப்பிடுவதும் அவரது போராட்டத்தை சுதந்திர போர் என்று சொல்வதும் மடத்தனம் மேலும் அன்னா ஹசாரே சொல்வது போன்ற லோக் பால் என்னும் அமைப்பு செயல் படும் பட்சத்தில் அதை நிர்வகிக்கும் பொறுப்பை யாரிடம் அளிப்பது என்றால் அதில் எந்த மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசியல் வாதிகளும் இடம் பெற கூடாதாம் அப்படியானால் யாரை தேர்ந்து எடுக்க போகிறார் எந்த அடிபடையில் தேர்ந்து எடுக்க போகிறார் இப்படி அன்னா ஹசரேவின் லோக்பால் போராட்டத்தில் எந்த உருப்படியான யோசனைகளும் இல்லை முதலில் லோக்பால் என்பது ஒன்றும் அன்னா ஹசாரே கண்டுபிடித்து அல்ல அது அரசியல் வாதிகளால் உருவாக்க பட்டது அன்னா ஹசரேவின் கோரிக்கைகள் என்ன என்றால் லோக்பால் மசோதாவை வரையறை செய்யும் குழிவில் தனுடைய ஆட்களை சேர்த்து கொள்ள வேண்டும் என்பது தான் மேலும் ஊழல் வாதிகளை ஏற்கனவே நடைமுறையில் நல்ல சட்டங்கள் இருக்கின்றன அவற்றை நடைமுறை படுத்தினாலே போதும். அன்னா ஹசாரே போராட்டம் என்னை பொறுத்த வரை ஒன்றை தெளிவாக காட்டுகிறது மக்களிடம் அரசியல் மற்றும் பொது விழிப்புணர்வு குறைந்து வருவதையும் ஊடகங்களின் பலத்துடன் யாரும் எதையும் சாதிக்கவும் அரசுகளை மிரட்டவும் முடியும் என்ற ஒரு தவறான கலாச்சாரம் வளர்வதையும் மட்டுமே