Sunday, April 29, 2012

பொய்யே உன் பெயர் திராவிடமா? அல்லது தமிழ் உணர்வா ?

சமீபத்தில் நடந்த மூன்று நிகழ்வுகளை பற்றிய ஒரு அலசல் 
இந்த மூன்று நிகழ்விலும் தமிழகத்தின் மூன்று திராவிட கட்சிகளை சேர்ந்தவர்களுடன் தொடர்புடையது அது மட்டும் அல்லாது இந்த மூன்று திராவிட கட்சிகளின் பொய் சொல்லும் திறனுக்கு ஒரு எடுத்துக்காட்டு
சம்பவம் 1 
 சட்ட சபையில் பேசிய அமைச்சர் வளர்மதி மதிய உணவு திட்டம் நீதி கட்சியின் ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகவும் அதை எம்.ஜி.ஆர் அவர்கள் தான் தமிழகம் முழுவதும் அமல்படுதியதாகவும் சொல்லி இருக்கிறார் மேலும் இதை காமராஜர் முழுமையாக அமல்படுத்தவில்லை என்றும் சொல்லி இருக்கிறார்
இது எவ்வளவு பெரிய பொய் இதை அவர் அறீவினத்தால் சொன்னாரா அல்லது ஆணவத்தால் சொன்னாரா என்பது அவருக்கு தான் வெளிச்சம் இதை மறுத்து பேசிய காங்கிரஸ் கட்சியை சார்ந்த திரு ரங்கராஜன் அவர்களுக்கு ஆணவத்தின் மிகுதியால் மறுபடியும் தப்பான பதிலையே சொல்லி இருக்கிறார் இதை எல்லாம் கேட்டு கொண்டு ஜெயலலிதாவும் இருந்திருக்கிறார் அவர் பரிவாரங்களும் இருந்திருக்கிறார்கள் எதிர் கட்சி வரிசையில் இருந்த தி.மு.க வும் எதுவும் கேட்க்க வில்லை வேறு யாரும் இது குறித்து மறுக்க வில்லை ஏன்? நீதியில் தவறாதவர்கள் என்று மார் தட்டும் பத்திரிக்கைகள் என்ன செய்கின்றன இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.
பசித்திருக்கும் குழந்தைகளால் எப்படி பாடம் படிக்க முடியும் என்று மதிய உணவு திட்டம் தந்து நாட்டின் கல்வி கண் திறந்தவர் காமராஜர் பள்ளிகள் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று கிராமங்கள் தோறும் பள்ளிகளை நிறுவி நாட்டின் அறியாமை இருளை அகற்றிய அந்த தியாக சுடரை இந்த திராவிட கட்சிகள் ன்று முதல் இன்றுவரை செய்த இருட்டடிப்பும் இழிவுகளும் இன்னும் தொடர்கிறது என்பது எவ்வளவு கேவ்வலமான செயல்
என்று தணியும் இந்த அவலம்.
சம்பவம் 2  
சமீபத்தில் சென்னையில் பழ. நெடுமாறன் விடுதலை புலி தலைவர் பிரபாகரன் பற்றி எழுதிய ஒரு நூல் வெளியீடு விழாவில் பேசிய வை.கோ 1994 ஆம் ஆண்டு வேலூர் சிறையில் இருந்து தப்பிய புலிகளின் வீர சாகசங்களை சிலாகித்து இரண்டாம் உலக போரின்போது ஹிட்லரின் சிறையில் இருந்து தப்புபவர்களை பற்றிய ஒரு ஆங்கில படத்தை சொல்லி அதை விட பெரிய சாகசங்கள் செய்ததாக சிலாகித்து புலிகளின் திறனை புகழ்ந்து தள்ளினார்.
புலிகள் தப்பித்து இலங்கை சென்று சேர்ந்ததை பற்றியும் சிறையில் இருந்து தப்புவதற்கு அவர்கள் செய்த தந்திரங்களையும் அவர்கள் வெட்டிய சுரங்கத்தையும்  இடையில் அகலியை கடக்க அவர்கள் முன்னமே தங்களை சந்திக்க வந்தவர்களிடம் வாங்கி வர சொன்ன பிளாஸ்டிக் தலையணை பற்றி எல்லாம் சொன்னவர் இலங்கையை அடைந்த பிறகு அவர்களுக்கு நேர்ந்ததை பற்றி சொல்லவில்லை
இதில் கொடுமை என்ன வென்றால் தப்பிய புலிகள் இலங்கையை சென்று சேர்ந்தவுடன் அவர்களின் சாகசத்திற்கு பிரபாகரனால் வழங்க பட்ட வெகுமதி என்ன தெரியுமா தப்பி வந்த புலிகள் ராவின் உளவாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு உடனடியாக தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு கொல்லபட்டார்கள் 
இதை ஏன் சொல்லவில்லை வை.கோ அவர்கள் 
சம்பவம் 3 
சமிபத்தில் இந்திய அரசு  போருக்கு பின்பான இலங்கை தமிழரின் நிலை குறித்து அறிய நாடாளுமன்ற உறுப்பினர் குழுவை அனுப்பியது அந்த குழுவில் தமிழரின் பிரதிநிதிகள் என்று தங்களை வரித்துக்கொண்ட இரண்டு பிரதான கட்சிகளும் இடம் பெற வில்லை இது தான் அவர்களின் தமிழ் பாசம் அதை விடுங்கள் குழுவில் இடம் பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த டி.கே.ரங்கராஜன் அவர்கள் இலங்கை தமிழர் தலைவர்கள் யாரும் எங்களுக்கு தமிழ் ஈழம் வேண்டும் என்று கேட்கவில்லை மாறாக ராஜீவ் ஜெயவர்தனே ஒப்பந்தத்தின் அடிப்படையில் 13 வது சட்ட திருத்தத்தின் அடிப்படையில் அதிகார பகிர்வு வேண்டும் என்று தான் கேட்பதாக பேட்டி அளித்தார் அவர் மேலும் கூறியது என்ன வென்றால் தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர் திரு. ஸ்ரீதரன் அவர்கள் தான் ஒரு இலங்கையை சேர்ந்தவனாக பிறந்ததாகவும் இலங்கையை  சேர்ந்தவனாகவே  இருக்க விரும்புவதாகவும் தெரிவித்தாக கூறினார் மேலும் இதே கருத்தை அணைத்து தமிழ் எம்.பி க்களும் தன்னிடம் தெரிவித்ததாக கூறினார் 
இந்த பேட்டி வெளியான உடனே கருணாநிதி இதற்க்கு கண்டனமும் இலங்கை தமிழர்கள் தனி ஈழத்தை தவிர வேறு எதையும் ஏற்க மாட்டார்கள் என்றும் மீண்டும் டெசொவை தான் தொடங்க இருப்பதாகவும் தெரிவித்தார் .
இலங்கை தமிழர்களுக்கு என்ன தேவையோ அதை தான் நாம் அவர்களுக்கு செய்து தர வேண்டும் அது தான் உதவி உங்களுக்கு தேவையானதை அவர்களுக்கு செய்வது அல்ல இலங்கை பிரச்சனை அந்த நாட்டிற்கும் அந்த நாட்டின் மக்களுக்கும் ஆனா பிரச்சனை இதில் நாம் அவர்கள் கோரிய படி நடப்பது தான் நல்லது இதை ஏற்றுக்கொண்டால் ராஜீவ் ஜெயவர்தனே ஒப்பந்தம் சரியானது என்று ஆகிவிடும் விடுதலை புலிகள் அதை எதிர்த்து இமாலய தவறு என்று ஆகிவிடும் என்று தானே இந்த விஷத்தை அணைத்து கட்சிகளும் ஊடகங்களும் இருட்டடிப்பு செய்கிறீர்கள் 
இத்தனை இழி பிழைப்பு பிழைக்கும் இவர்கள் தான் தமிழனை தலை நிமிர வைப்பவர்கள் இந்த பிழைப்பை இவர்களுக்கு கற்று கொடுத்தவர்கள் தான் தமிழர் தந்தை
 நல்ல தகப்பன்! நல்ல பிள்ளைகள்!!!
 வாழ்க திராவிடம்! வாழ்க தமிழ் உணர்வு!!!


Saturday, April 28, 2012

ஈழ தமிழ் தலைவர்களும் மக்களும் வலியுறுத்தி கேட்பது ராஜீவ் ஜெயவர்தனே ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆன சட்ட திருத்தம் ஒன்று பட்ட இலங்கையில் தமிழர்களுக்கு ஆன அதிகார பகிர்வு அதை அவர்களுக்கு பெற்று தர மத்திய அரசுக்கு உதவாமல் இங்குள்ள போலி தமிழ் உணர்வு அரசியல் வியாபாரி தலைவன் கருணாநிதி தனி ஈழம் தான் தீர்வு என்று கூறுவது எனக்கெனவோ ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாக தெரிகிறது

Monday, January 16, 2012

பாவம் பாரதிய ஜனதா கட்சி தான் தேசிய கட்சி என்பதை கூட மறந்து விடுவார்கள் போல ஜெயலலிதாவை பிரதமராக ஏற்றுக்கொள்ள கூட தயாராகிவிட்டார்கள் யாராவது தயவு செய்து எதை தின்றால் பித்தம் தெளியும் என்று திரியும் அத்வானியிடம் அன்னா ஹசாரே பாபா ராம்தேவ் போன்ற காமெடியன்கள் பின்னால் சுத்தாமல் உருப்படியான ஆரோக்கியமான அரசியலை செய்ய சொல்லுங்கள் அப்போது தான் கட்சியை வளர்க்க முடியும் நாட்டிற்க்கு இதுவரை எந்த நல்லதையும் பா.ஜ.க செய்தது இல்லை மக்களை மத ரீதியாக பிளவு படுத்தியதை மட்டும் தான் தங்கள் சாதனையாக சொல்ல முடியும் தேசிய அரசியலில் நல்ல கட்சிகள் வளர்ந்தால் தான் நல்ல ஆட்சியை வழங்க முடியும் காங்கிரஸ் தேசிய அரசியலில் உள்ள ஒரே சிறந்த கட்சி அதற்க்கு இணையாக ஒரு கட்சி கூட இல்லை அதனால் தன்னை நல்ல கட்சியாக பா.ஜ.க வளர்த்து கொள்ள வேண்டும் அப்போது தான் தேசிய நீரோட்டத்தில் ஆரோக்கியமான அரசியல் நடக்கும் இல்லை என்றால் பா.ஜ.க இதே அழுக்கு அரசியலை செய்து நாட்டையும் மக்களையும் அரசியல் தெரியாத வரலாறு தெரியாத அப்பாவி இளைங்கர்களை தூண்டி விடும்
நடை பெற உள்ள ஐந்து மாநில தேர்தல்களில் உத்தர பிரதேசத்தை தவிர மற்ற அணைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெரும் உ.பி யில் பாரதிய ஜனதாவை பின்னுக்கு தளி கண்டிப்பாக மூன்றாவது இடத்தை பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு தான் அன்னா ஹசாரே குழுவினர் பிரசாரத்திற்கு செல்ல வில்லை

Tuesday, January 3, 2012

நாகையில் ஜி.கே.வாசன் நேரில் ஆய்வு

நாகப்பட்டினம் : நாகை மாவட்டத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : தானே புயலால் நாகை, கடலூர், திருவாரூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன; அறுவடை காலத்தில் விவசாயிகள் லாபத்தை எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் புயலால் பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன; இது விவசாயிகளை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது; விவசாயிகளின் இந்த தாங்க முடியாத துயரத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க துணை செய்வோம்; நிவாரண பணிகள், சீரமைப்பு பணிகள், நிவாரண கணக்கெடுப்பு பணிகளை தமிழக அரசு விரைந்து மேற்கொண்டு வருகிறது; இதனை போர்க்கால அடிப்படையில் விரைந்து மேற்கொள்ள தமிழக அரசை வலியுறுத்துவோம்; மேலும் அத்தியாவசிய பொருட்களான குடிநீர், மின்சாரம் ஆகியவற்றை விரைவில் வழங்கவும் தமிழக அரசை வலியுறுத்துவோம்; நாளை டில்லியில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழகத்தில் ஏற்பட்ட புயல் சேதம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவிக்க உள்ளேன்; தமிழகத்திற்கு தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க பிரதமரிடம் வலியுறுத்த உள்ளேன். இவ்வாறு வாசன் தெரிவித்துள்ளார்.