Saturday, April 25, 2015

தமிழ் மாநில காங்கிரஸ் முதல் பொதுக்குழு




 
த.மா.கா.வின் முதல் பொதுக்குழு கூட்ட சில நிகழ்வுகள்.
* த.மா.கா.வின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் இன்று நடந்தது.
* இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்துக்கு மாநிலம் முழுவதும் இருந்து 2 ஆயிரம் பேருக்கு தனித்தனியே அழைப்பிதழ்களை தலைவர் வாசன் அனுப்பி இருந்தார்.
* த.மா.கா.வின் முதல் பொதுக்குழு என்பதால் தொண்டர்கள் உற்சாகமாக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்திருந்தனர்.
* மாநிலம் முழுவதிலும் இருந்து நேற்று இரவே சென்னைக்கு தொண்டர்கள் வர தொடங்கினார்கள்.
* கார், வேன்களில் தொண்டர்கள் வந்து குவிந்துள்ளனர்.
* இன்று காலை 9 மணி முதல் பொதுக்குழு கூடிய அரங்கத்துக்குள் தொண்டர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
* அரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த கவுண்டர்களில் ரூ.500 செலுத்தி பொதுக்குழு உறுப்பினர்களாக தங்கள் பெயர்களை பதிவு செய்து கொண்டனர்.
* சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஜி.கே.வாசன் வீட்டில் இருந்து வானகரம் வரை த.மா.கா. கொடி, பேனர்கள், அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டு இருந்தன.
* கோயம்பேட்டில் இருந்து வானகரம் வரை ரோட்டின் இருபுறமும் பிரமாண்டமான வரவேற்பு பேனர்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
* பகல் 12 மணிக்கு ஜி.கே.வாசன் பொதுக்குழு கூட்டத்துக்கு வந்தார்.
* வழி நெடுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
* பூந்தமல்லி ரோட்டில் இருந்து ஸ்ரீவாரு மண்டபம் வரை திரண்டு இருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் தலைவர் ஜி.கே.வாசன் வந்த வாகனம் மெதுவாக ஊர்ந்து சென்றது.
* மேள தாளங்களுடன் உற்சாகமாக தொண்டர்கள் அழைத்து வந்தனர்.
* மண்டப வாயிலை நெருங்கியதும் அதிர்வேட்டுகள் காதை பிளந்தன. ‘மக்கள் தளபதி வாழ்க’, ‘வருங்கால தமிழகம் வாழ்க’ என்று தொண்டர்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பினார்கள்.
* தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட தலைவர் ஜி.கே.வாசன் 12.05 மணிக்கு பொதுக்குழு அரங்கத்துக்கு வெளியே த.மா.கா. கொடியை ஏற்றி வைத்தார்.
* அதைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.கூட்டம் தொடங்கியதும் 12.15 மணிக்கு கட்சி தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை ஞானதேசிகன் வெளியிட்டார்.
* அதைத் தொடர்ந்து அய்யா ஜி.கே.வாசன் தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்தார்.
* வேறு யாரும் மனுதாக்கல் செய்யாததால் ஜி.கே.வாசன் த.மா.கா. தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
* இதற்கான அறிவிப்பை ஞானதேசிகன் வெளியிட்டார். உடனே பொதுக்குழு உறுப்பினர்கள் பலத்த ஆரவாரத்துடன் கரவொலி எழுப்பினார்கள்.
* அதைத் தொடர்ந்து புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஜி.கே.வாசனை வாழ்த்தி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், பீட்டர் அல்போன்ஸ், மகேஸ்வரி, கோவை தங்கம் உள்பட பலர் பேசினார்கள்.
* அதை தொடர்ந்து கட்சியின் செயல் திட்டங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* அதன் பிறகு தலைவர் ஜி.கே.வாசன் பொதுக்குழுவில் உரையாற்றினார்.
* இந்த பொதுக்குழுவில் திராவிட மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஆ.ஞானசேகரன், அருந்ததி மக்கள் கட்சி தலைவர் வலசை ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். அவர்கள் தலைவர் ஜி.கே.வாசனுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.


No comments:

Post a Comment