Tuesday, November 23, 2010

மூப்பனார் சிறப்பு அஞ்சல்தலை இருட்டடிப்பு? - தினமணி நாளேடு கண்டனம்

மக்கள் தலைவர் என்று அனைவராலும் போற்றப்பட்ட அய்யா ஜி.கே.மூப்பனார் அவர்களின் தபால் தலை வெளயீடு எந்த செய்தியும் இன்றி இருட்டடிப்பு செய்யப்பட்டது மட்டும் இன்றி தமிழகத்தில் உள்ள எந்த அஞ்சலகங்களிலும் கிடைக்கவில்லை என்ற செய்தி நிச்சயமாக வேண்டும் என்றே நடத்தபடுவதாக தெரிகிறது மேலும் அய்யா அவர்கள் மறைந்து ஒன்பது ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்டதே தவறு அதற்கு காரணம் தகவல் தொழில் நுட்ப துறை தொடர்ந்து மற்ற கட்சிகளின் கையில் இருப்பதுவே அதுவும் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த கூட்டணி கட்சியிடம் இருந்து வருகிறது சந்தர்பம் கிடைக்கும் போதெல்லாம் தனது நண்பர் என்று கூறிகொள்ளும் தலைவரை கொண்ட கூட்டணி கட்சி இதற்கு முன்பான காலத்திலும் பல முறை அய்யா அவர்களின் புகழை இருட்டடிப்பு செய்ய முயற்சித்திருக்கிறது உதாரணத்திற்கு சிவாஜிகணேசனுக்கு சிலைவைத்த தமிழக அரசு தற்போது தான் அய்யா அவர்களுக்கு சிலை வைக்க அனுமதி தந்தது மேலும் ஒரு மதத்தின் போதகர் என்பதை தவிர வேறு எந்த தகுதியும் அற்ற தினகரனின் பெயரை சென்னையில் உள்ள சாலைக்கு சூடினார்கள் அனால் அய்யா அவர்களின் பெயரை சூட்ட வில்லை இவை தோழமை கட்சியின் செயலை காட்டுகிறது மக்கள் தலைவரை பொறுத்த வரை காமராஜருக்கு பின் உருவான தலைவர்களில் முதன்மையானவர் ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகளை கடந்தவர் அதனால் தான் அவரை மக்கள் தலைவர் என்று அழைக்கிறோம் மேலும் தனை நாடி வந்த அத்தனை பதவிகளையும் வேண்டாம் என்று ஒதுக்கியவர் அதனால் தான் இன்று தினமணி நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டு தன் ஆதங்கத்தை வெளியிட்டுள்ளது அந்த செய்தி பின்வருமாறு தங்களுக்கு கொடுக்கபட்டுளது செய்தி வெளியிட தினமணி நாளிதலுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
நவ. 23: மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் சிறப்பு அஞ்சல்தலை இருட்டடிப்பு செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. இந்திய அஞ்சல்துறை பொதுப் பயன்பாட்டுக்காக அஞ்சல்தலைகளை வெளியிடுகிறது. இதுதவிர, அரசியல் தலைவர்கள், வரலாற்றுச் சின்னங்கள், முக்கிய நிகழ்வுகளைச் சிறப்பிக்கும் வண்ணம் அவ்வப்போது, சிறப்பு அஞ்சல்தலைகளையும் வெளிட்டு வருகிறது.பொதுப்பயன்பாட்டுக்கான அஞ்சல்தலைகள் நாடு முழுவதும் உள்ள 1,60,000 அஞ்சலகங்களில் கிடைக்கும். ஆனால், சிறப்பு அஞ்சல்தலைகள், தமிழகத்தில் உள்ள 5 அஞ்சலகங்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள 72 சிறப்பு அஞ்சல் நிலையங்களில் மட்டுமே கிடைக்கும். பொதுவாக, சிறப்பு அஞ்சல்தலை வெளிடப்படும்போது, அஞ்சல்தலை, முதல் நாள் உறை, விளக்கக் குறிப்பு ஆகிய மூன்றும் வெளியிடப்படும். வெளியிடப்படும் நாளன்றே நாடு முழுவதும் உள்ள 72 அஞ்சலகங்களிலும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும்.அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் இந்தச் சிறப்பு அஞ்சல்தலைகள் வெளியிடப்படும் நாளன்றே அஞ்சலகங்களில் வாங்குவதை விரும்புவர்.ஆனால், சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜி.கே. மூப்பனாரின் சிறப்பு அஞ்சல்தலை தமிழகத்தில் உள்ள அஞ்சலகங்களில் வெளியிடப்பட்ட நாளிலிருந்தே கிடைக்கவில்லையாம்.இதுகுறித்து திருச்சியைச் சேர்ந்த அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் கூறியது: "தமிழக முன்னாள் முதல்வர் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியாரின் சிறப்பு அஞ்சல்தலை ஆகஸ்ட் 25-ம் தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 30-ம் தேதி தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் சிறப்பு அஞ்சல்தலையும் வெளியிடப்பட்டது.இந்த இரண்டு சிறப்பு அஞ்சல்தலைகள், வெளியிடப்பட்ட நாளிலிருந்தே தமிழகத்திலும், கேரளத்திலும் கிடைக்கவில்லை. இன்னும் வரவில்லை என அஞ்சலக அதிகாரிகள் கூறுகின்றனர்' எனத் தெரிவித்தனர்.அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக மூப்பனாரின் அஞ்சல்தலைகள் அஞ்சலங்களில் விற்கப்படாமல் தடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், தமிழகம், கேரளம் தவிர மற்ற மாநிலங்களில் எளிதாகக் கிடைக்கிறது.மேலும், ஜி.கே. மூப்பனாரின் அஞ்சல்தலை வெளியீட்டுக்கு முன்பு, ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் மறைந்த ஒய். ராஜசேகரரெட்டியின் சிறப்பு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.அந்த அஞ்சல்தலை ராஜசேகர ரெட்டியின் அழகான புகைப்படத்துடன், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மூப்பனாரின் அஞ்சல்தலையில் அவரது உருவப்படம் தெளிவில்லாமல் இருக்கிறது.எனவே, மூப்பனாரின் சிறப்பு அஞ்சல்தலையை இருட்டடிப்பு செய்வதற்காகத்தான் இதுபோல செய்யப்பட்டுள்ளது என்ற புகார்கள் எழுந்துள்ளன.இதுகுறித்து திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி பொறுப்புக் குழு உறுப்பினர் புலியூர் ஏ. நாகராஜன் கூறியது: "மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் நேசிக்கப்பட்டவர். எந்தப் பதவிக்கும் ஆசைப்படாதவர். பிரதமர் பதவியே தேடி வந்தபோது அதை நிராகரித்தவர். பல பிரதமர்களை உருவாக்கியவர். அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு அஞ்சல்தலை வெளியிட்டது பாராட்டத்தக்கது. ஆனால், அந்த அஞ்சல்தலை மூப்பனாரின் சொந்த மாநிலமான தமிழகத்திலேயே கிடைக்காதது வருத்தமாக இருக்கிறது' என்றார் நாகராஜன்.எனவே, மத்திய அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு ஜி.கே. மூப்பனாரின் சிறப்பு அஞ்சல்தலைகள் தமிழகத்தில் உள்ள அஞ்சலகங்களில் கிடைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியினர், அஞ்சல்தலை சேகரிப்பாளர்களின் எதிர்பார்ப்பு

No comments:

Post a Comment