Saturday, April 11, 2015

கர்மவீரர், மக்கள் தலைவர் மற்றும் பாரதரத்னா ராஜீவ் சிலை திறப்பு விழா



திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் முன்னாள்
இளைஞர் காங்கிரஸ் செயலர் ஜோதிக்கு சொந்தமான
இடத்தில், மறைந்த தலைவர்கள் காமராஜர், ராஜிவ்,
மூப்பனார் ஆகியோருக்கு, சிலைகள் நிறுவப்பட்டுள்ள
ன. இந்த மூன்று தலைவர்களின் சிலைகளை, ராகுல்
தான், திறந்து வைக்க வேண்டும் என்பதற்காக,
நீண்ட நாட்களாக சிலை அமைப்பு குழு காத்திருந்தது.
சமீபத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர்
இளங்கோவன், திருநெல்வேலி சுற்றுப் பயணம்
சென்ற போது, மூன்று தலைவர்களின் சிலைகளையும்
பார்வையிட்டார். அதைத் தொடர்ந்து, மூன்று
தலைவர்களின் சிலைகளை திறக்க, ராகுலுக்கு அழைப்பு
விடுத்தார். ஓய்வு நாட்களை முடித்து விட்டு, டில்லிக்கு
ராகுல் திரும்பியதும், அவரை திருநெல்வேலிக்கு
அழைத்து வந்து, சிலைகளை திறந்து வைக்கவும்
இளங்கோவன் தீவிரமாக இருந்தார். இந்நிலையில்,
நெல்லை மாவட்ட காங்கிரஸ் பிரமுகர் சார்லஸ்
ஏற்பாட்டின் பேரில், ஜோதி தலைமையில் 100 பேர், வாசன்
முன்னிலையில் த.மா.கா,வில் இணைந்தனர்.
இதனால், மூன்று தலைவர்களின் சிலைகளை, ராகுல்
திறந்து வைக்க வாய்ப்பில்லை என்பதால்,
இளங்கோவன் மற்றும் திருநெல்வேலி மாவட்ட
காங்கிரஸ் பிரமுகர்கள், அதிர்ச்சி
அடைந்துள்ளனர். இதற்கிடையில், ராகுல் திறக்க
இருந்த, அந்த மூன்று தலைவர்களின் சிலைகளையும்,
இனி வாசன் திறந்து வைப்பார் என, சிலை அமைப்பு
குழுவின் தலைவர் ஜோதி தெரிவித்துள்ளது, காங்கிரஸ்
தரப்பில் கடும் எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment