Saturday, December 3, 2011

ஒ.வீ.அழகேசன் அவர்கள் நூற்றாண்டு விழா


தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவரும் , சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஓ.வி.அழகேசன் நூற்றாண்டு விழா நேற்று சென்னை மியூசிக் அகாடமி அரங்கத்தில் நடந்தது.இதில், விழா மலரை கவர்னர் ரோசய்யா வெளியிட, மத்திய அமைச்சர் வாசன் பெற்றுக் கொண்டார். அருகில்சரோஜினி வரதப்பன், மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர்களும், தொண்டர்களும் கலந்து கொண்டனர் விழாவில் பேசியவர்கள் அழகேசன் அவர்களால் தமிழகத்துக்கு கிடைத்த சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலை, பூண்டி நீர் தேக்கம் மற்றும் அவர் நாட்டிற்கு ஆற்றிய சேவை செய்த தியாகம் ஆகியவற்றை நினைவு கூர்ந்தார்கள் அய்யா ஒ.வீ.அழகேசன் அவர்களை இந்த தருணத்தில் நினைவு கூர்வது மட்டும் அல்லாமல் அவர்களின் தியாகத்தையும் வாழ்கை நெறிகளையும் நாமும் பின்பற்ற வேண்டும்.

No comments:

Post a Comment