நாகப்பட்டினம் : நாகை மாவட்டத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது : தானே புயலால் நாகை, கடலூர், திருவாரூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன; அறுவடை காலத்தில் விவசாயிகள் லாபத்தை எதிர்பார்த்திருக்கும் நேரத்தில் புயலால் பயிர்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன; இது விவசாயிகளை வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது; விவசாயிகளின் இந்த தாங்க முடியாத துயரத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க துணை செய்வோம்; நிவாரண பணிகள், சீரமைப்பு பணிகள், நிவாரண கணக்கெடுப்பு பணிகளை தமிழக அரசு விரைந்து மேற்கொண்டு வருகிறது; இதனை போர்க்கால அடிப்படையில் விரைந்து மேற்கொள்ள தமிழக அரசை வலியுறுத்துவோம்; மேலும் அத்தியாவசிய பொருட்களான குடிநீர், மின்சாரம் ஆகியவற்றை விரைவில் வழங்கவும் தமிழக அரசை வலியுறுத்துவோம்; நாளை டில்லியில் நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழகத்தில் ஏற்பட்ட புயல் சேதம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவிக்க உள்ளேன்; தமிழகத்திற்கு தேவையான நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க பிரதமரிடம் வலியுறுத்த உள்ளேன். இவ்வாறு வாசன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment