இன்றைய அரசியல் சூழ் நிலைகளில் இருந்தும் அதற்கும் மக்களிடம் வெளிப்படும் எண்ணங்களில் இருந்தும் ஒன்றை மட்டும் தெளிவாக உணர முடிகிறது மக்களுக்கு அரசியல் தெளிவும் அறிவும் இப்போது சுத்தமாக இல்லை மேலும் வரலாறை யாரும் தெரிந்து கொள்வதில்லை அப்படியே தெரிந்து கொண்டாலும் மேல் புல்லை மேய்ந்த கதையாக தான் இருக்கிறது அவர்களது அரசியல் அறிவு இதற்கு ஒரு நல்ல உதாரணம் சமிபத்திய அன்னா ஹசாரே மற்றும் ராம் தேவ் நடத்திய கோமாளி நாடகங்கள் தான். வரலாற்றை தெளிவாக படிக்காதவர்களும், அரசியலை நன்றாக அறிந்து கொலாதவர்களும் ஊடகங்களை மட்டும் பார்த்து, படித்து, கேட்டு அறிவை வளர்க்கும் அரைவேக்காடுகள் தான் அன்னா ஹசாரே போராட்டத்தை இரண்டாம் சுதந்திர போர் என்று சொல்கிறார்கள் .
முதலில் அன்னா ஹசரேவை காந்தியோடு ஒப்பிடுவதும் அவரது போராட்டத்தை சுதந்திர போர் என்று சொல்வதும் மடத்தனம் மேலும் அன்னா ஹசாரே சொல்வது போன்ற லோக் பால் என்னும் அமைப்பு செயல் படும் பட்சத்தில் அதை நிர்வகிக்கும் பொறுப்பை யாரிடம் அளிப்பது என்றால் அதில் எந்த மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசியல் வாதிகளும் இடம் பெற கூடாதாம் அப்படியானால் யாரை தேர்ந்து எடுக்க போகிறார் எந்த அடிபடையில் தேர்ந்து எடுக்க போகிறார் இப்படி அன்னா ஹசரேவின் லோக்பால் போராட்டத்தில் எந்த உருப்படியான யோசனைகளும் இல்லை முதலில் லோக்பால் என்பது ஒன்றும் அன்னா ஹசாரே கண்டுபிடித்து அல்ல அது அரசியல் வாதிகளால் உருவாக்க பட்டது அன்னா ஹசரேவின் கோரிக்கைகள் என்ன என்றால் லோக்பால் மசோதாவை வரையறை செய்யும் குழிவில் தனுடைய ஆட்களை சேர்த்து கொள்ள வேண்டும் என்பது தான் மேலும் ஊழல் வாதிகளை ஏற்கனவே நடைமுறையில் நல்ல சட்டங்கள் இருக்கின்றன அவற்றை நடைமுறை படுத்தினாலே போதும். அன்னா ஹசாரே போராட்டம் என்னை பொறுத்த வரை ஒன்றை தெளிவாக காட்டுகிறது மக்களிடம் அரசியல் மற்றும் பொது விழிப்புணர்வு குறைந்து வருவதையும் ஊடகங்களின் பலத்துடன் யாரும் எதையும் சாதிக்கவும் அரசுகளை மிரட்டவும் முடியும் என்ற ஒரு தவறான கலாச்சாரம் வளர்வதையும் மட்டுமே
No comments:
Post a Comment