Sunday, August 7, 2011

அப்துல் கலாமும் இந்திய வல்லரசும் !!!

அன்புக்குரிய அப்துல் கலாம் அவர்களே அணு ஆயுதங்களை வைத்து இருப்பதாலும் ஏவுகணைகளை கொண்டிருப்பதாலும் கனவுகள் கான்பதாலும் மட்டுமே இந்திய வல்லரசு ஆகி விட முடியுமா ஏன் ஊரை ஏமாற்றுகிறிர்கள் பாவம் இந்த ஆட்டு மந்தைகள் உங்களுக்கு தலை ஆட்டுகின்றன. அணு ஆயுதங்களை கொண்டிருப்பதாலும், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகளை கொண்டிருப்பதாலும் மட்டுமே இந்திய வல்லரசு ஆகிவிடும் என்று கனவு கண்டு சொன்ன அப்துல் கலாம் அவர்களே நாட்டின் இன்றைய மின் தேவைக்கு கூடங்குளம் அணு உலை தேவை என்று ஏன் சொல்லவில்லை ?
நான் மறுபடி மறுபடி சொல்வதெல்லாம் இன்றைய தலைமுறையினரிடம் தக்க அரசியல் அறிவோ விழிப்புணர்வோ இல்லாதது முக்கியமாக இது போன்ற அரசியல் கோமாளிகளுக்கும் ஊடகங்களுக்கும் மிகபெரிய வசதியாக போய்விட்டது அதனால் தான் எதாவது உளறுபவர்களுக்கு கூட இன்று கூட்டம் கூடுகிறது அதிலும் குறிப்பாக தனை அரசியல்வாதிகளுக்கு எதிரானவனாகவும் இந்த தேசத்தை வலப்படுதிட வந்தவனாகவும் காட்டி கொண்டால் போதும் எல்லோரும் உங்களுக்கு சலாம் சொல்வார்கள் ஒரே ஒரு நிபந்தனை எப்படியாவது இந்தியாவில் இருக்கின்ற பெரிய ஊடகங்களை நீங்கள் வசியப்படுத்தி கொண்டால் போதும் அதற்க்கு ஒன்றும் பெரிய நிபந்தனிகள் இல்லை அவர்களின் வியாபாரம் உங்களால் இன்னும் சிறப்பாக நடந்தால் போதும் அவ்வளவு தான்.
அப்துல் கலாம் நல்லா மனிதர் நல்லா விஞ்ஞானி அவரின் நாட்டிற்கான சேவையை யாரும் குறை சொல்ல வில்லை ஆனால் அவரை ஏதோ தீர்க்கதரிசி போலவும் இந்த நாட்டை காக்க வந்தவர் போலவும் புகழ்வதை என்னால் ஏற்று கொள்ள முடியாது அவர் கண்ணை மூடி கொண்டு இந்திய ௨0௨0 ஆம் ஆண்டு உலக வல்லரசு ஆகிவிடும் என்று சொல்வதை ஏற்று கொள்ள முடியாது அதை வல்லரசாக்கும் திட்டங்கள் உங்களிடம் என்ன இருக்கிறது அதை எப்படி செயல் படுத்த போகிறிர்கள் இதற்கான விடைகள் உங்களிடம் இருக்கிறதா கலாம் அவர்களே .
பாரதிய ஜனதா கட்சி தான் நிறுத்தும் குடியரசு தலைவர் வேட்பாளர் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோற்று விட கூடாது என்ற காரணத்தினால் தான் நீங்கள் குடியரசு தலைவராக பொருபேற்றிர்கள் ஆனால் அந்த ஐந்து ஆண்டுகளில் உங்களிடம் முடிவெடுக்க நிறைய தடுமாற்றங்கள் இருந்தது அதனால் தான் அடுத்த ஐந்து ஆண்டுகள் உங்களை தலைவராக ஏற்க காங்கிரஸ் மறுத்து விட்டது உங்களுக்கு தலைமை என்ற பண்பு கொஞ்சமும் கிடையாது என்பது நல்ல அரசியல் முதிர்ச்சி உள்ள எல்லோருக்கும் தெரியும் ஆனால் அது பாவம் உங்களுக்கு தெரியவில்லை அதனால் தான் மறுபடி ஒரு முறை அந்த பதவியில் அமர ஆசைபட்டீர்கள் அனால் அதற்கு நாட்டின் நலனில் அக்கறை உள்ளவர்கள் எதிராக இருந்தார்கள்.
நீங்கள் தயவு செய்து எதாவது கல்லூரி மாணவர்களுக்கு விஞ்ஞான பாடம் நடத்துங்கள் தயவு செய்து இந்த நாட்டின் அரசியலை குழப்பாதீர்கள் ஏன் என்றால் உங்கள் வழியை ஒற்றி தான் இன்றைக்கு அன்னா ஹசாரே போன்றவர்களும் தங்கள் பங்கிற்கு இந்திய அரசியல் குழப்பி மீன் பிடிக்க நினைக்கிறார்கள்

No comments:

Post a Comment